போட்டி வேட்பாளர்கள் மீது திமுக நடவடிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் சுயேச்சையாக மனு தாக்கல்செய்துள்ள கட்சியின் போட்டி வேட்பாளர்கள் தங்களது மனுக்களை வாபஸ்பெறாவிட்டால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுககூறியுள்ளது.
இது தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திமுக சார்பில் போட்டியிட சீட் கிடைக்காத கழகத் தோழர்கள் சிலர், சட்டப் பேரவைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக சுயேச்சையாக வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்என்று தலைமைக் கழகத்திற்குச் செய்தி கிடைத்துள்ளது.
இவ்வாறு வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள கழகத் தோழர்கள் வியாழக்கிழமைக்குள்தங்களது வேட்புமனுவைத் திரும்பப் பெறாவிட்டால், கழகத்தின் சட்டதிட்டப்படிஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக பொதுச் செயலாளர் அன்பழகன்கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications