என்ன செய்யப் போகிறார் ஜெ.?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அதி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் 4 வேட்பு மனுக்களும்நிராகரிக்கப்பட்டு விட்டன. இதனால் தமிழக தேர்தல் களத்தில் புதிய சூழ்நிலைஏற்பட்டுள்ளது.

மீண்டும் முதல்வர் பதவிக்கு வரும் ஜெயலலிதாவின் ஆசைக்கு இப்போதைக்குமுற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது. கடந்த ஐந்து ஆண்டு காலமாக வழக்குகள்,கோர்ட்டுகள், அப்பீல்கள், வாதப் பிரதிவாதங்கள் என அலை பாய்ந்து வந்தஜெயலலிதாவுக்கு வராது வந்த மாமணியாக சட்டசபைத் தேர்தல் வந்தது.

முதல்வர் கருணாநிதி தன் மீது தொடர்ந்த படிப்படியான வழக்குகள் மூலம்மக்களிடையே அனுதாபம், தி.மு.க. ஆட்சி மீது ஆங்காங்கே காணப்படும்குறைபாடுகளை தனக்கு சாதகமாக மாற்ற முயன்ற ஜெயலலிதா. இந்த முறைஎப்படியும் ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என்று தீவிரமாக செயல்பட்டார்.

முதல் கட்டமாக தி.மு.க. கூட்டணியில் முக்கிய கட்சியாக இருந்த பாட்டாளிமக்கள் கட்சியை தன் பக்கம் இழுத்தார். தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ்கட்சிகளையும் தன் பக்கம் வைத்துக் கொண்டார்.

தேர்தல் களத்தில் பலம் வாய்ந்த கூட்டணியாக அ.தி.மு.க. கூட்டணி மாறியது. இந்தத்தேர்தலில் ஜெயலலிதாவுக்கும் வாய்ப்பு உள்ளது என்ற நிலை உருவானது.

எல்லாம் நல்லபடியாக போய்க் கொண்டுள்ளது என்ற கருத்து அ.தி.மு.கவட்டாரத்தில் உருவாகிக் கொண்டிருந்த நேரத்தில் வில்லனாக உருவெடுத்தது, டான்சிநில பேர ஊழல் வழக்கின் தீர்ப்பு.

இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனைவிதிக்கப்பட்டதால், ஜெயலலிதாவால் தேர்தலில் போட்டியிட முடியாது என்றுகூறப்பட்டது.

1951-ம்ஆண்டு மக்கள் பிரதிநதித்துவ சட்டப்படி, 2 ஆண்டுகளுக்கு மேல் கடுங்காவல்சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட யாரும் தேர்தலில் போட்டியிட முடியாது என்று விதிஉள்ளது. ஆனால் ஜெயலலிதா தரப்பில் இதெல்லாம் பொய், ஜெயலலிதா தேர்தலில்போட்டியிட முடியும் என்று கூறி வந்தார்கள்.

இந்த நிலையில், தான் தேர்தலில் போட்டியிட தடையாக உள்ள டான்சி பேர ஊழல்வழக்கின் தீர்ப்பை நறுத்தி வைக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதாமனு செய்தார். ஆனால் தீர்ப்பை நிறுத்தி வைக்க டியாது என்று கோர்ட் கூறி விட்டது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் ஜெயலலிதா இரண்டு தொகுதிகளில்போட்டியிடுவதாக அறிவித்தார். ஆண்டிப்பட்டி, கிருஷ்ணகிரி ஆகிய தொகுதிகளில்அவர் வேட்பு மனுவும் தாக்கல் செய்தார்.

முக்கிய அரசியல் தலைவர்களில் முதலில் வேட்பு மனுத் தாக்கல் செய்தது அவர்தான்என்பது குறிப்பிடத்தக்கது. வேட்பு மனுத்தாக்கல் செய்த கையோடு தென்மாவட்டங்களில் தீவிர பிரசாரத்திலும் இறங்கினார்.

ஜெயலலிதாவின் வேகத்தைப் பார்த்தபோது, அவரால் தேர்தலில் போட்டியிடமுடியும் என்ற நிம்பிக்கை அ.தி.முகவினரிடத்தில் வந்தது. எதிர்க்கட்சிகளுக்கு பீதிஏற்பட்டது. நிலைமை இப்படி இருக்க, திடீரென புவனகிரி, புதுக்கோட்டை ஆகியதொகுதிகளில் ஜெயலலிதா வேட்பு மனுத்தாக்கல் செய்தார். இதையடுத்து அவர் இந்தத்தேர்தலில் போட்டியிட முடியாது என்பது உறுதியானது.

சட்டப்படி ஒரு வேட்பாளர் 2 தொகுதிகளுக்கு மேல் போட்டியிட முடியாது.இதையடுத்து ஜெயலலிதா வேட்பு மனுக்களின் கதி என்ன என்பது குறித்து ஓரளவுதெளிவானது. செவ்வாய்க்கிழமை வேட்பு மனுக்கள் பரிசீலனையின்போது,ஜெயலலிதாவின் 4 வேட்பு மனுக்களும நிராகரிக்கப்பட்டு விட்டன.

இப்போது தமிழக தேர்தல் களத்தில் வித்தியாசமான சூழல் ஏற்பட்டுள்ளது. தி.மு.க.தரப்பில் முதல்வர் பதவிக்கான நபர் தெளிவாக காணப்படுகிறார். எதிர்த்தரப்பில்பெரும் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதா இல்லை என்றாகி விட்டது. அடுத்துயார் என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது. மூப்பனாரா அல்லது டாக்டர் ராமதாஸாஎன்ற கேள்வி மக்களின் மனதிலும், அரசியல் வட்டாரத்திலும் விவாதம் கிளம்பி விட்டது.

ஒருவேளை அ.திமு.க.கூட்டணி கணிசமான இடங்களில் வெற்றி பெற்றால், யார்முதல்வர் என்ற சர்ச்சை அ.தி.மு.க. வட்டாரத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.ராமதாஸை முதல்வர் பதவியில் அமர்த்த ஜெயலலிதா விரும்ப மாட்டார்.மூப்பனாரையும் அவர் விரும்பவில்லை.

அ.தி,மு.கவின் இரண்டாம் கட்டத் தலைவர்களில் ஜெயலலிதாவுக்கு விசுவாசமானநபர்களாக இப்போதைக்கு முன்னாள் அமைச்சர் காளிமுத்து, ஓ.எஸ்.மணியன்,எம்.பி, தம்பித்துரை ஆகியோர் உள்ளனர். இவர்களைத் தவிர இன்னொருமுக்கியமான நபரும் உள்ளார். அவர் வேறு யாருமல்ல சசிகலாதான்.

சசிகலாவும், அவரது அக்காள் மகன் தினகரன் எம்.பியும், ஜெயலலிதாவுக்கு அடுத்துகட்சியில் முக்கியத் தலைவர்களாக உள்ளனர்.

இவர்களிடம் அதிகாரப் பொறுப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.இருப்பினும், இதற்கு ராமதாஸ் போன்றவர்கள் ஒப்புக் கொள்வார்களா என்பதுசந்தேகமே.

கடைசி நேரத்தில் ஏதாவது அதிசயம் நடக்கவும் வாய்ப்புகள் உள்ளன. ஜெயலலிதாஎன்ன செய்வார் என்பதைத்தான் யாருமே கணிக்க முடியாதே?

ஜெயலலிதாவின் அடுத்த கட்ட நடவடிக்கையை தமிழகமே ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+