நாய், பூனையை வெட்டிக் கொன்றவர் தற்கொலை

Subscribe to Oneindia Tamil

கோவை:

நாய், பூனையை வெட்டிக் கொன்றவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கோவை குனியத்தூர் அருகே உள்ள சுகுணாபுரத்தைச் சேர்ந்தவர் முருகன் (42). இவர் பெயிண்டராக வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகள் உண்டு.மகளுக்குத் திருமணம் செய்து கொடுத்து விட்டார். மனைவி பேபியுடன் வாழ்ந்து வந்தார்.

இவருக்கு போதைப் பழக்கம் உண்டு. போதையில் எதையாவது செய்து கொண்டிருப்பது இவரது பொழுது போக்காக இருந்து வந்தது.

வழக்கம்போல குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். அவரது மனைவி வீட்டைப் பூட்டி விட்டு வெளியே சென்றிருந்தார். வீட்டை உடைத்துத் திறந்த அவரை, பூனைவரவேற்றது.

அதனைப் பார்த்த அவர், அரிவாளை எடுத்து வெட்டினார். பின்னர் வீட்டிற்கு வெளியே வந்தார். நாய் அவரை நன்றியுடன் பார்த்து வாலை ஆட்டியது. அதனைக் கண்டமுருகனுக்கு ஆத்திரம் வந்தது. நாயையும் ஒரே வெட்டாக வெட்டினார்.

நாயும் பூனையும் துடிதுடித்து இறந்தன.

அப்போது அவரது மனைவி வீட்டிற்கு வந்து சேர்ந்தார். நாயையும், பூனையையும் வெட்டிப் போட்டிருந்த கணவனைப் பார்த்த அவர் அதிர்ச்சியைடைந்தார். அருகில்,இருந்தவர்களிடம் தன் கணவனின் செயல் குறித்து கூறினார்.

இதனால் எல்லோரும் சேர்ந்து முருகனைத் திட்டித் தீர்த்தனர். அவமானப்பட்ட முருகன், அங்கிருந்து கிளம்பினார். இரவு முழுவதும் வீட்டிற்கு வரவில்லை. அவரதுமனைவி பேபி, பல இடங்களிலும் தேடிப் பார்த்தார். எங்கும் ஆள் கிடைக்கவில்லை.

இந் நிவையில் அவர் ஒரு புளியமரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+