ஜெயலலிதா பிராயச்சித்தம் தேட வேண்டும்.. சுவாமி
மதுரை:
தான் செய்த தவறுகளுக்கு ஜெயலலிதா பிராயச்சித்தம் செய்தால்தான் அவருக்குஅரசியலில் எதிர்காலம் உண்டு என ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியம் சுவாமிஜோசியம் கூறியுள்ளார்.
ஜெயலலிதாவின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டது குறித்து மதுரையில்செய்தியாளர்களுக்கு பேட்டிளித்த சுப்ரமணியம் சுவாமி, ஜெயலலிதாவின் வேட்புமனுக்கள் 4 தொகுதிகளிலும் நிராகரிக்கப்பட்டு விட்டது.
இந்த நாட்டில் காசு கொடுத்து எல்லாவற்றையும் வாங்க முடியாது. தட்டிக் கேட்கயாராவது இருப்பார்கள் என்பது இப்போது அவருக்கு தெரிந்திருக்கும்.
ஜெயலலிதா மீது டான்சி வழக்கை தொடர்ந்தது நான் தான். அவரோடு கூட்டணிவைத்திருந்தபோதும் நான் வழக்கை வாபஸ் வாங்கவில்லை.
யாராக இருந்தாலும் தவறு செய்தால் தண்டனை உண்டு. தான் செய்ய தவறுகளுக்குபிராயச்சித்தம் செய்தால் ஜெயலலிதாவுக்கு அரசியலில் எதிர்காலம் உண்டு.இல்லையென்றால் அவருக்கு அரசியலில் எதிர்காலம் கிடையாது என்றார்.
காங்கிரஸ் கருத்து:
ஜெயலலிதாவின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது குறித்து காங்கிரசின் டெல்லிமத்திய தலைமை கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது. இது அதிமுகவின் உட்கட்சிவிவகாரம். இது குறித்து நாங்கள் கருத்து கூற விரும்பவில்லை என காங்கிரஸ்கூறியுள்ளது.
அதிமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications