ஜெ. மனு தள்ளுபடி .. சட்டவிரோதம் என்கிறார் வீரமணி
சென்னை:
ஜெயலலிதாவின் வேட்பு மனுக்களை தள்ளுபடி செய்துள்ளது சட்டவிரோதமானதுஎன்று திராவிடர் கழக பொதுச் செயலாளர் கி.வீரமணி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக வீரமணி வெளியிட்ட செய்திக்குறிப்பில், ஜெயலலிதாவின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி தொடர்ந்து பேசிக் கொண்டுவந்த நிலையில், ஜெயலலிதாவின் மனுக்கள் நிராகரிக்கப்படாது என்று கூற முடியாதசூழ்நிலை ஏற்பட்டு விட்டது.
அவரது மனுக்கள் நிராகரிக்கப்பட்டது, ஜனநாயக உரிமையைப் பறித்தது போலாகும்.இது சட்டவிரோதமானது, நியாயமில்லாதது.
தி.மு.க. -பா.ஜ.க. கூட்டணிக்கு இது ஒரு தற்காலிகமான வெற்றிதான். அரசியலில்பழி வாங்கும் நடவடிக்கைகள் எந்த எல்லைக்கும் செல்ல முடியும் என்பதற்குஜெயலலிதாவின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி ஒரு உதாரணம்.
ஆளுங்கட்சிக்கு இந்தத் தேர்தலில் பெண்களும், வாக்காளர்களும் சரியான பாடம்புகட்டுவார்கள்.
இறுதியில் சிரிப்பவர்கள் யார் என்பதுதான் முக்கியம், முதலில் சிரிப்பவர்களைசரித்திரம் கண்டு கொண்டதேயில்லை என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications