என் மகன் தான் அடுத்த முதல்வர்: கருணாநிதி மறைமுக அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

வேலூர்:

மு.க. ஸ்டாலின் முதல்வராக வரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அதை யார் தடுக்கமுடியும் என தமிழக முதல்வரும், தி.மு.க.தலைவருமான கருணாநிதி கேள்விஎழுப்பினார்.

வேலூரில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு கருணாநிதிபேசுகையில், ஆற்காடு வீராசாமி, மறைந்த சிட்டிபாபு ஆகியோரோடு மிசாகொடுமைகளின் போது சிறை சென்றவர்தான் ஸ்டாலின்.

மிசா கொடுமையால் சென்னை சிறையில் சித்திரவதைக்கு ஆளான தியாகிகளில்ஒருவர் ஸ்டாலின். இவர் ஜெயலலிதா போல் மேக்கப் போட்டுக் கொண்டு வந்தவரல்ல.

தியாக வீரர்களை கொண்ட தி.மு.க. தற்போது தேசிய அளவில் ஆளும் ஜனநாயககூட்டணியில் இடம் பெற்றுள்ளது.

சிறுபான்மையினருக்கு ஆதரவளிப்பதாக கூறும் கட்சிகள் சிறுபான்மையினருக்குஎத்தனை இடங்கள் கொடுத்துள்ளன. தி.மு.க. எத்தனை இடங்கள் கொடுத்துள்ளன எனஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

த.மா.காவில் பெண்களுக்கு தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை என சிதம்பரம்கூறியதற்கு பெண்களுக்கு பிரச்சனை இருப்பதால் தொகுதிகள் ஒதுக்கப்படவில்லைஎன ஜெயந்தி நடராஜன் கூறியுள்ளார்.

முன்னர் த.மா.கா.சார்பில் 3 பெண்கள் போட்டியிட்டனர். அப்போது இல்லாமல்இப்போது பெண்களுக்கு புதிதாக என்ன பிரச்சனை வந்துள்ளது என்பது ஜெயந்திநடராஜனுக்கு மட்டுமே வெளிச்சம்.

தேர்தல் கமிஷன் நீண்ட காலமாக கடைபிடித்து வரும் விதிமுறைகளின்படிசெயல்படுவதை மீண்டும் நிரூபித்துள்ளது.

எங்கள் கட்சியின் வேட்பாளர்கள் அனைவரின் வேட்பாளர்களின் வேட்பு மனுக்ளும்ஏற்றுக் கொள்ளப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது.

இன்னொருவரின் மனு நிராகரிக்கப்பட்டது வருத்தமளிக்கிறது. ஜனநாயகபோர்க்களத்தில் எதிரும் புதிருமாக போட்டியிட்டு ஜெயிப்பதுதான் பிடிக்கும். அதுதான் பெருமை.

ஆனால் எதிரி தானாக சிக்கிக் கொண்டால் நாம் எதுவும் செய்ய இயலாது.

நாங்கள் வழக்குபோட்டதால்தான் தேர்தலில் நிற்க தடைவிதித்தாக கூறுகிறார்கள்.1996ம் ஆண்டு தேர்தலின் போது மக்கள் ஊழல் செய்தவர்கள் மீது வழக்கு போடுமாறுகேட்டுக் கொண்டனர். அதன்படிதான் நாங்கள் செயல்பட்டோம்.

இங்குள்ள கூட்டம் பல பத்திரிக்கையாளர்களுக்கு தெரிவதில்லை. அது நல்லதுதான்.நம் பலம் எதிரிக்கு தெரியக்கூடாது என்றார் கருணாநிதி.

ஸ்டாலின் கருத்து:

தி.மு.க. ஜனநாயகரீதியான அமைப்பு. அதில் நான் முதல்வராக வாய்ப்பில்லை எனமுதல்வரின் மகனும் சென்னை மேயருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஸ்டாலின் கன்னியாகுமரியில் தற்போது பிரச்சாரம் செய்து வருகிறார். அவர்புதன்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், ஜெயலலிதாவின்வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதால் அனுதாப அலை எதுவும் வீசாது.

தி.மு.க. அமோக வெற்றி பெறும். சிலர் கூறுவது போல் தேர்தலுக்குப் பின் ஆட்சியில்பங்கு என்ற பேச்சுக்கே இடமில்லை. தி.மு.க, தனிப் பெரும்பான்மை பெற்று ஆட்சிஅமைக்கும்.

தி.மு.க ஜனநாயக ரீதியான அமைப்பு என முதல்வர் பலமுறை வலியுறுத்திகூறியுள்ளார். அதனால் அதில் நான் முதல்வராவதற்கு வாய்ப்பில்லை என்றார்.

செவ்வாய்க்கிழமை வேலூரில் நடந்த பிரச்சார கூட்டத்தில் ஸ்டாலின் முதல்வராவதையாரும் தடுக்க முடியாது என கருணாநிதி கூறியபின் புதன்கிழமை ஸ்டாலின் கூறியகருத்து முக்கியத்துவம் பெறுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+