For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அடையாள அட்டை இல்லாமல் வாக்களிக்கலாம்: தேர்தல் ஆணையம்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

வரவிருக்கும் தமிழக சட்டசபைத் தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் வேறு குறிப்பிட்ட சிலதஸ்தாவேஜூகளை ஆதாரமாகக் காட்டி வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அடுத்தமாதம் தமிழக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதில் அடையாள அட்டை இல்லாத வாக்காளர்கள்வாக்களிக்கக் கூடாது என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

தமிழகத்தில் 70 சதவிகித வாக்காளர்களுக்கு மட்டுமே புகைப்படம் ஒட்டிய அடையாள அட்டைவழங்கப்பட்டுள்ளது. இதனால் அடையாள அட்டை கட்டாயமாக்கப்படக் கூடாது என அரசியல் கட்சிகள்கோரிக்கை விடுத்து வந்தனர்.

தற்போது வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள், 16 விதமான குறிப்பிட்ட தஸ்தாவேஜூகள் ஏதாவதுஒன்றை காட்டினால் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என அறிவித்துள்ளது.

தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள வேறு சில அடையாள தஸ்தாவேஜூகள்:

1. பாஸ்போர்ட்டுகள்

2. டிரைவிங் லைசென்ஸ்

3. வருமானவரி அட்டை

4. மத்திய அரசு, மாநில அரசு, பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், தனியார் தொழில்நிறுவனங்கள் வழங்கியுள்ள அடையாள அட்டைகள்.

5. பாங்க் பாஸ்புக், தபால் நிலைய பாஸ்புக், விவசாய பாஸ் புக்(கிசான் கார்டு)

6. 2001ம் ஆண்டு ஜனவரிமாதத்திற்கு முன்பு வழங்கப்பட்ட ரேஷன் கார்டு.

7. தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்கள், பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள்வழங்கியுள்ள சான்றிதழ்கள்.

8. மாணவர் அடையாள அட்டை.

9. பட்டாபத்திரம் போன்ற தஸ்தாவேஜூகள்.

10. துப்பாக்கி லைசென்ஸ்.

11. போக்குவரத்து ஆணையத்தால் வழங்கப்பட்ட நடத்துனர் அடையாள அட்டை.

12. பென்ஷன் தஸ்தாவேஜூகள்.

13. முன்னாள் ராணுவத்தினரின் விதவைகள், வாரிசுகளுகாகன சான்றிதழ்கள்.

14. ரயில் பாஸ், பஸ் பாஸ்.

15. ஊனமுற்றோர் அடையாள அட்டை

16.சுதந்திர போராட்ட வீரருக்கான அடையாள அட்டை.

அடையாள அட்டைகள் சரிபார்க்கப்படுவது தொடர்பாகவும் தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம்உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது:

வாக்காளர் அடையாள அட்டையை அடையாள அட்டையில வாக்காளர் பெயரிலோ, முகவரியிலோ சிறுதவறுகள் இருந்தால் அவை புறக்கணிக்கப்படலாம்.

வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள வரிசை எண்ணும் (சீரியல் நம்பர்) வாக்காளர் பட்டியலில் உள்ளவரிசை எண்ணுக்கும் முரண்பாடு இந்தால் அதையும் புறக்கணித்து விடலாம்.

ஒரு வாக்காளர் ஒரு தொகுதியில் வாங்கிய வாக்காளர் அடையாள அட்டையை வேறொரு தொகுதியில்காட்டினால், அவரது பெயர் அந்த தொகுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்தால் அவர் அந்த தொகுதியில்வாக்களிக்க அனுமதி அளிக்கலாம்.

ஆனால் அதே சமயம் அவர் இரண்டு தொகுதிகளில் வாக்களிக்க முடியாது என்பதை உறுதி செய்ய வேண்டும்.

அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்துக்கோ, ஊர்வலத்துக்கோ லாரி உள்ளிட்ட வாகனங்களிலும், குறிப்பிட்டஅளவுக்கு மேல் ஆட்களை ஏற்றி வரக்கூடாது.

சட்டம் ஒழுங்கு பிரச்சனை இல்லாமல் தேர்தல் சுமூகமாக நடைபெற இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதைமீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X