சென்னையில் திமுகவினர் தீவிர பிரசாரம்
சென்னை:
சென்னை நகர் முழுவதிலும் பல்வேறு தொகுதிகளில் திமுகவினர் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்டனர்.
சைதாப்பேட்டை தொகுதி திமுக வேட்பாளர் வை.பெருமாள் கிண்டி, கன்னிகாபுரம் ஆகிய பகுதிகளில்ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பிரசாரம் மேற்கொண்டார். தாரை, தப்பட்டையுடன் ஊர்வலமாக சென்று அவர்பிரசாரம் மேற்கொண்டார். பல இடங்களில் அவருக்குப் பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
தாம்பரம் தொகுதி திமுக வேட்பாளர் மீ.அ.வைத்தியலிங்கம், பல்லாவரம், குரோம்பேட்டை, வேளச்சேரி உள்ளிட்டபல பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் பிரசாரம் மேற்கொண்டார்.
மைலாப்பூர் தொகுதி பாரதீய ஜனதாக் கட்சி வேட்பாளரும், மாநில பாரதீய ஜனதாக் கட்சித் துணைத் தலைவருமானலட்சுமணனை ஆதரித்து, மத்திய அமைச்சரும், தென் சென்னை திமுக செயலாளருமான டி.ஆர்.பாலு பிரசாரம்செய்தார். திறந்த வேனில் மயிலாப்பூர் தொகுதியின் பல்வேறு பகுதிகளிலும் திமுகவினர் மற்றும் வேட்பாளர்லட்சுமணன், டி.ஆர். பாலு ஆகியோர் ஊர்லவமாக சென்று வாக்கு சேகரித்தனர்.
திமுகவினர் மேற்கொண்ட பிரசாரம் அனைத்திலும் பாரதீய ஜனதாக் கட்சியினர் மற்றும் கூட்டணி கட்சியினர்பெரும் திரளாக கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications