மை காய்ந்தால்தான் ஓட்டுப் போட முடியும்
சென்னை:
தமிழக சட்டசபைத் தேர்தலில் கள்ள ஓட்டைத் தடுக்கும் வகையில், கையில் தடவப்படும் அழியாத மை காய்ந்தபின்தான் ஓட்டுப்போட அனுமதிக்கப்படும் என்று தமிழக தேர்தல் அதிகாரி மிருதுயுஞ்சய் சாரங்கி தெரிவித்தார்.
ஒவ்வொரு தேர்தலிலும் பல வாக்காளர்களும் கள்ள ஓட்டுப் போடுகிறார்கள் என்பது பரவலான குற்றச்சாட்டு.
இந்தக் கட்சியினர்தான் என்றில்லாமல் எல்லாக் கட்சியினருமே கள்ள ஓட்டுப் போட்டதைப் பெருமையாக வேறுசொல்லிக் கொண்டு வந்தனர்.
இந்தக் கள்ள ஓட்டைத் தடுக்க, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் புது வழி ஒன்று கையாளப்பட இருக்கிறது என்றுதமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சாரங்கி கூறினார்.
ஓட்டுப் போடுவதற்கு முன் வாக்காளர்களின் விரலில் அழியாத மை தடவப்படும். இது காய்வதற்கு முன்பேவாக்காளர்கள் ஓட்டுப் போட முடியும் என்ற நிலை கடந்த தேர்தல் வரை இருந்தது.
இதனால் வாக்காளர்கள் உடனே மையை அழித்துவிட்டு கள்ள ஓட்டுக்களைப் போட்டு வந்தனர்.
ஆனால் இந்தத் தேர்தலில், மை நன்றாகக் காய்ந்த பின்புதான் ஓட்டுப்போட வாக்காளர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
இது தொடர்பாக அனைத்துத் தேர்தல் அதிகாரிகளுக்கும், வாக்குச் சாவடியில் பணிபுரியவிருக்கும் அரசுஊழியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் சாரங்கி.
ரேஷன் அட்டையைக் காண்பித்து ஓட்டு:
வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் ரேஷன் கார்டைக் காண்பித்து ஓட்டுப் போடலாம் என்றும் தேர்தல்அதிகாரி சாரங்கி கூறினார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications