52 பதட்டமான தொகுதிகள்: தேர்தல் கமிஷன் தகவல்
சென்னை:
தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே இருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் 52 தொகுதிகள் பதட்டம் நிறைந்தபகுதிகளாக தேர்தல் கமிஷனால் அறிவிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சாரங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னையில் மட்டும் 37 வாக்குச் சாவடிகள் பதட்டம் நிறைந்தவையாகக் கருதப்படுகின்றன.
வாக்குச் சாவடியைக் கைப்பற்றுதல், மின் வாக்கு எந்திரத்தைச் சேதப்படுத்துதல் மற்றும் ஜாதி மதச் சண்டைகள்ஆகியவற்றால் பதட்டம் அதிகரிக்க வாய்ப்புக்கள் உள்ளன என்று தேர்தல் பார்வையாளர்கள் அஞ்சுகின்றனர்.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்ட கிருஷ்ணகிரி, ஆண்டிபட்டி மற்றும்புவனகிரி ஆகிய தொகுதிகளும் பதட்டம் நிறைந்த தொகுதிகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
காஞ்சிபுரம், வேலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய பகுதிகளில் பாமக - திமுக கட்சித் தொண்டர்களிடையேபெரும் கலவரம் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏப்ரலில் மட்டும் மாநிலம் முழுவதும் பல வன்முறைகள் நிகழ்ந்துள்ளன. தலித்துகள் அதிகமாக இருப்பதாகக்கருதப்படும் தூத்துக்குடி மாவட்டம் பட்டுக்கோட்டையில் அதிமுக தொண்டர்கள் தாக்கப்பட்டது இதற்கு ஒருஉதாரணமாகும்.
தேர்தலை ஆதாயமாக வைத்து, பல அரசியல் தலைவர்களும் பழிதீர்த்தல் நடவடிக்கைகளை நடத்த உள்ளனர்.
அனுமதியில்லாமல் எழுதப்பட்டிருந்த பல சுவர் விளம்பரங்களை அழித்ததற்காக, பல கட்சிகளும் தேர்தல்அதிகாரிகளை மிரட்டியிருப்பதாக ஏற்கனவே பல புகார்கள் வந்துள்ளன.
ஒரு கட்சியைச் சேர்ந்தவர்கள் அடுத்த கட்சியின் வெப் சைட்டுக்குள் நுழைந்து அராஜகம் செய்த கொடுமையும்நிகழ்ந்திருக்கிறது என்று கூறினார்.
ஐ.ஏ.என்.எஸ்.


Click it and Unblock the Notifications
