யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது: சுவாமி கணிப்பு
கோவை:
வரவிருக்கும் சட்டப் பேரவைத் தேர்தலில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது. அப்போது தமிழகத்திற்கு நல்லது செய்ய நினைக்கும்அணியை உருவாக்குவேன். எங்கள் கட்சி அதில் முக்கிய இடம் பெறும் என்றார் அகில இந்திய ஜனதா கட்சித் தலைவர்சுப்ரமணியசாமி.
தேர்தல் பிரசாரம் செய்ய கோவைக்கு வந்த அகில இந்திய ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியசாமி, விமான நிலையத்தில்நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,
ஜெயலலிதாவும், கருணாநிதியும் ஒருவருக்கொருவர் ஊழல் குற்றச்சாட்டுக்களையே கூறி வருகின்றனர். இருவருமே ஊழல்செய்பவர்கள்தான்.
திமுக தலைவர் கருணாநிதி ஆட்சியிலிருந்தபோதும், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆட்சி செய்தபோதும் தமிழகத்தில்பொருளாதார வளர்ச்சி இல்லை. கடந்த 10 ஆண்டுகளாகத் தமிழகத்தில் பொருளாதாரம் பின் தங்கி விட்டது.
கல்வியில் இரண்டாவது இடத்தில் இருந்த தமிழகம் இப்போது 5 வது இடத்திற்கு தள்ளப்பட்டு விட்டது.
முல்லைப் பெரியாறு அணையை உயர்த்தக் கோரி நான் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளேன். இதற்கான விசாரணை மே4ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. ஜெயலலிதாவோ, கருணாநிதியோ இதை ஏன் செய்யவில்லை?
நாங்கள் ஜனதா கட்சி சார்பில் 30 இடங்களில் போட்டியிடுகிறோம். அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். இந்ததேர்தலில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது.
அப்போது தமிழகத்திற்கு நல்லது செய்ய நினைக்கும் அணியை உருவாக்குவேன். எங்கள் கட்சி அதில் மு முக்கிய இடம் பெறும்.
தமிழ்நாட்டில் போலீஸ் சங்கம் அனுமதிக்க கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தேன். அரசு போலீஸ் சங்கம் அமைக்கக்கூடாது எனஉறுதி மொழி எழுதி வாங்கிக் கொண்டது.
இந்த நிலையில் இப்போது திமுக போலீஸ் சங்கம் அமைக்கப் பாடுபடுவோம் என வாக்குறுதி அளித்துள்ளது வேடிக்கையாக உள்ளது.
ஜெ மனுதள்ளுபடி செய்யப்பட்டது போலவே கேரளாவில் பாலகிருஷ்ணனின் மனு தள்ளுபடி செய்யப்பட்டிருக்க வேண்டும்.
வீரப்பனை பிடிக்க முடியவில்லை என்பதற்காக மற்ற திருடர்களையும் விட்டு விட முடியாது.
ஜெயலலிதாவுக்குக் கிடைத்த தண்டனையின் காலம், அவர் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகள் மூலம் இன்னும் 18 ஆண்டுகளுக்குமுதல்வராக முடியாது. மத்தியில் சோனியாவுக்கும் வாஜ்பாய்க்கும் இடையே ரகசிய உடன்பாடு உள்ளது என்றார் சுவாமி.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications