பா.ஜ.கவை வீழ்த்துவோம்: மார்க்.கம்யூ.
கோவை:
இந்து ராஷ்டிரம் என வலியுறுத்தும் பாரதிய ஜனதாக் கட்சியிடம், தமிழகத்தின் தனித் தன்மையை எப்படி திமுக காப்பற்றப்போகிறதுஎன அகில இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித் வினா எழுப்பினார்.
கோவை, சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிடும் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் கருணாகரனை ஆதரித்து அகில இந்தியமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித் பேசியதாவது:
பாரதிய ஜனதாக் கட்சியின் கொள்கை இந்து ராஷ்டிரம் என்பது தான். அவர்களுடன் கூட்டணி வைத்திருக்கும் முதல்வர் கருணாநிதி,எப்படி அவர்களிடமிருந்து தமிழ்நாட்டின் தனித் தன்மையைக் காப்பாற்ற போகிறார்? பாரதிய ஜனதாவைப் பொறுத்தவரை இரண்டுவிஷயங்கள் முக்கியமானவை.
முதலாவது அந்தக் கட்சி நாட்டின் ஒற்றுமைக்கு எதிரான மதவாதக் கட்சி. இரண்டாவது நாட்டின் பாதுகாப்பைகேள்விக்குறியாக்கியுள்ளது. மிகவும் ஆபத்தான சக்தியாக விளங்கும் பாரதிய ஜனதாவுடன் திமுக கூட்டணி வைத்துள்ளது.
பிரதமர் முதல் அமைச்சர்கள் வரை யாரையும் விலை கொடுத்து வாங்கி விடலாம் என்பதற்கு பா.ஜ ஆட்சியில் நடக்கும் ஊழல் ஒருகாரணமாகத் திகழ்கிறது. சுங்கத் துறையில் வர்மாவின் ஊழல், தொலைபேசித் துறையில் 1300 கோடிரூபாய் ஊழல், இப்போது பங்குச்சந்தையில் ஊழல், ஆயுத பேரத்தில் ஊழல் என அனைத்திலும் சிக்கியுள்ளது.
இந்த முறை 5 மாநிலங்களில் தேர்தல் நடக்கிறது. அனைத்து மாநிலங்களிலும் பாரதிய ஜனதாக் கட்சியின் ஆட்சியை நீக்க வேண்டும்என மக்கள் மனதில் எண்ணம் எழுந்துள்ளது.
ஜெயலலிதாவின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படாவிட்டாலும், ஒவ்வொரு தொகுதியும் தன்னுடைய தொகுதியாக நினைத்துபிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். தமிழகத்தில் பாரதிய ஜனதாக் கட்சியின் கூட்டணி தோற்கடிக்கப்படுவது உறுதி என்றார் அவர்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications