சாத்தூரில் கே.கே.எஸ்.எஸ்.ஆருக்கு வெற்றிமுகம்
சாத்தூர்:
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆரே இந்தமுறையும் வெற்றி பெறுவார் என்று தெரிகிறது.
1977 ம் ஆண்டு முதல் இதே தொகுதியில் 4 முறை எம்.எல்.ஏ.வாகத் தேர்வு செய்யப்பட்டவர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.
இந்த முறை திமுக சார்பில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ராஜேந்திரன்,மதிமுக வேட்பாளர் ராஜா சொக்கலிங்கம் ஆகியோருக்கு தொகுதியில் குறைந்த செல்வாக்கே உள்ளது எனலாம்.
சாத்தூர் தொகுதியில் போட்டியிடும் மொத்த எம்எல்ஏக்கள் 16 பேரில் இவர்கள் மூன்று பேரைத் தவிர மற்றவர்கள்அனைவரும் சுயேட்சைகள்.
தமிழ்நாட்டிலேயே அதிக அளவு வாக்காளர்கள் உள்ள தொகுதி சாத்தூர் தொகுதி. இங்கு மொத்தம் 2, 15, 000வாக்காளர்கள் உள்ளனர்.
இவர் எம்.ஜி.ஆர்.அமைச்சரவையில் இருந்த போது ஒரு தடவை எம்.எல்.ஏ.வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பின்னர் கடந்த சில வருடங்களுக்கு முன் அதிமுகவிலிருந்து பிரிந்து திமுகவில் சேர்ந்தார். தற்போது முதல்வர்கருணாநிதி மற்றும் மேலும் ஸ்டாலினுக்கு இவர் மேல் நல்ல மரியாதை உண்டு.
இவர் மக்கள் தமிழ் தேசம் உள்பட பல கட்சிகள் திமுக கூட்டணிக்கு வருவதற்கு பெரும் பங்கு வகித்தவர்.
ரெட்டியார், செட்டியார் மற்றும் தலித்துக்கள் ஆகியோர் அதிகம் உள்ள தொகுதி இந்தத் தொகுதி. ரெட்டியார்சமூகத்தைச் சேர்ந்த கே.கே.எஸ்.எஸ்.ஆர் ஜமீன்குடும்பத்தைச் சேர்ந்தவர்.
இந்தத் தொகுதியில் குழந்தைத் தொழிலாளர்கள் அதிகம் உள்ளனர். இவர்கள் பெரும்பாலும் தீப்பெட்டித்தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார்கள். மொத்த வாக்காளர்களில் பாதிபேர் கல்வியறிவு இல்லாதவர்கள்.
இவரை எதிர்த்துப் போட்டியிடும் வேட்பாளர்களை விட தொகுதியில் அதிக செல்வாக்கைப் பெற்றிருப்பவர்கே.கே.எஸ்.எஸ்.ஆர். இதனால் இவர் எளிதில் வெற்றி பெற்று விடுவார் என்றும் கூறலாம்.
மேலும் இந்தத் தொகுதியில் 1962 ம் ஆண்டு முதல் காங்கிரஸ் வெற்றி பெற்றதேயில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications