துபாய் டூ ஹைதராபாத்: ஜூலை 1 முதல் நேரடி விமானம்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்:

ஐக்கிய அரசு நாடான துபாயிலிருந்து எமிரேட் ஏர்லைன்ஸ் ஜூலை 1 ம் தேதி முதல் ஹைதராபாத்துக்குவிமானத்தை விடத் தீர்மானித்துள்ளது.

இந்த விமானம் தினமும் துபாயிலிருந்து ஹைதராபாத்துக்குச் செல்லும்.

இதற்கான ஒப்பந்தம் இந்திய அரசுக்கும், துபாய் எமிரேட்ஸ் விமான நிலையத்துக்கும் இடையே கையெழுத்தானது.ஜூலை மாதம் 1 ம் தேதி துபாயிலிருந்து கிளம்பும் விமானம் ஜூலை 2 ம் தேதி காலை ஹைதராபாத் வந்து சேரும்.

இதுகுறித்து ஹைதராபாத் விமான நிலைய அதிகாரிகள் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை:

துபாயிலிருந்து ஹைதராபாத்துக்கு வரும் விமானத்தில் வாரத்திற்கு 2,000 பயணிகள் பயணம் செய்ய முடியும்.

மலேசியாவும் ஹைதராபாத்திலிருந்து கோலாலம்பூருக்கு விமானத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளது. இந்தவிமானச்சேவை இந்த மாத இறுதியிலிருந்து இயக்கப்படும்.

மே மாதம் 16 ம் தேதி முதல் ஹைதராபாத்திலிருந்து ஜெட்டாவுக்கு வாரம் ஒரு முறை நேரடி விமானம்இயக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளது. ஹைதராபாத் - ஜெட்டா விமானம் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைஹைதராபாத்திலிருந்து புறப்பட்டுச் செல்லும்.

ஏற்கனவே ஹைதராபாத்திலிருந்து ஜெட்டா நகருக்கு 3 விமானங்கள் செல்கின்றன.

மேலும் இந்த மாத இறுதி முதல் கேரள மாநிலம் கோழிக்கோட்டியிலிருந்து ஜெட்டா நகருக்கு விமானத்தை இயக்கத்திட்டமிட்டுள்ளது ஏர் இந்தியா.

முன்னதாக, ஹைதராபாத் - துபாய், ஹைதராபாத் - ஜெட்டா விமானங்கள் பொதுமக்களுக்கு அதிக அளவில்பயனைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள் துபாயில் அதிக அளவுவேலை செய்வதால் இந்த விமானச்சேவை பெரிதும் உதவும்.

ஹைதராபாத்திலிருந்து வாரத்திற்கு 18 விமானங்கள் சவுதி அரேபியா, டாமன், ரியாத் மற்றும் ஜெட்டா ஆகியநகரங்களுக்கு இயக்கப்படுகின்றன.

தற்போது ஹைதராபாத்திலிருந்து துபாய்க்குச் செல்லும் விமானங்கள் அதிகரித்து வருவதால் சுற்றுலாத்துறையும்நன்கு வளர்ச்சி பெற்று வருகிறது என்று கூறலாம்.

இதற்கிடையே, ஜெட்டா நகருக்கு ஹைதராபாத்திலிருந்து விமானம் விடுவது குறித்து ஆந்திர முதல்வர் சந்திர பாபுநாயுடு ஐக்கிய அரபு நாடுகளுக்குச் சென்றிருந்த போது, இது குறித்து எமரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமான நிலையஅதிகாரிகளுடன் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+