லாரி கவிழ்ந்து 6 மாடுகள் சாவு
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவையில் லாரி கவிழ்ந்ததில் 6 மாடுகள் இறந்தன. டிரைவர் காயமடைந்தார்.
தர்மபுரியிலிருந்து 20 மாடுகளை ஏற்றிக் கொண்டு ஒரு லாரி கேரளாவிற்கு சென்று கொண்டிருந்தது. கோவை நீலாம்பூர் பைபாஸ் ரோட்டில்வெள்ளலூர் பிரிவு என்ற இடத்தில் வரும்போது லாரி திடீரென நிலை தடுமாறி, அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் 6 மாடுகள் இறந்தன. டிரைவர் அழகேசன் காயமடைந்தார். மேலும் இந்த விபத்தில் கிளீனர் வேலு, வடிவேலுஆகியோர் காயமடைந்தனர்.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications