அதிமுக வென்றால் ஜெ.தான் முதல்வர்: முன்னாள் அமைச்சர்
கோவை:
தேர்தல் ஆணைய சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் ஆளுநரைக் கட்டுப்படுத்தாது. எனவே, அதிமுக வென்றால்ஜெயலலிதாவை முதல்வராக பொறுப்பேற்க வைக்க முடியும் என முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம்தெரிவித்தார்.
முன்னாள் அதிமுக அமைச்சரவையில் கல்வி அமைச்சராக இருந்த அரங்கநாயகம் கோவையில் நிருபர்களுக்குஅளித்த பேட்டியில் கூறியதாவது:
தலைமைத் தேர்தல் கமிஷனின் ஆணைகள் தேர்தல் அதிகாரிகளை மட்டுமே கட்டுப்படுத்தும். மற்றவர்களைக்கட்டுப்படுத்த முடியாது.
தேர்தல், அது தொடர்பான மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் ஆகியவை மட்டுமே தேர்தல் கமிஷனின்சட்டவிதிமுறைகளுக்கு உட்பட்டவை. மற்றவர்களைச் சட்டம் தான் கட்டுப்படுத்தும்.
தமிழக ஆளுநர் தேர்தல் விதிமுறைப்படி நடக்க வேண்டிய அவசியம் இல்லை. எனவே சட்டப்படி ஆளுநர்ஜெயலலிதாவை முதல்வராகப் பொறுப்பேற்க அழைப்பதில் பிரச்னை இல்லை.
தேர்தல் விதிமுறைகளுக்கு ஜெயலலிதா தடை வாங்கினால், தேர்தலிலும் போட்டியிட முடியும்.
அவர் தேர்தல் விதிமுறைகளில் தடை கோர நான்கு காரணங்களைக் கூற முடியும். உச்சநீதிமன்றத் தீர்ப்பின்அடிப்படையில், தண்டனை குறித்து மேல் முறையீடு செய்தால் அது நீதிமன்ற விசாரணையின் தொடர்ச்சியாகும்.எனவே, தனது வழக்கில் மேல் முறையீடு செய்தால் அது தண்டனை பெற்றதாகாது.
தண்டனை நிறுத்தி வைக்கும் பட்சத்தில் தகுதியிழப்பும் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தான் அர்த்தம். எனவே, தற்போதுதகுதியிழப்பு செய்தது செல்லத்தக்கதல்ல.
தேர்தல் ஆணைய விதிமுறைகளை சட்டப்படி திருத்த போதுமான பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன. இந்தபரிந்துரைகளை ஏற்கும் வரை தேர்தல் கமிஷனின் விதிமுறைகளுக்கு தடை கோரலாம்.
தகுதியிழப்பு பற்றிய 3 மக்கள் பிரதிநிதித்துவச் சட்ட துணை விதிகளை அமல்படுத்துவதற்குப் பதிலாக, 3 ஆண்டுகள்சிறைத் தண்டனை அனுபவித்தவர்கள் போட்டியிட முடியாது என தீர்வு சொல்லலாம்.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தை சட்டப்படி குறைக்கவோ, கூட்டவோ தேர்தல் கமிஷன் மேற்கொள்ள முடியாது.இதனை நாடாளுமன்றம் தான் செய்ய வேண்டும்.
ஜெயலலிதா மீது சாட்டப்பட்டுள்ள குற்றம், அரசியல் உள்நோக்கம் கொண்டது. இதில், அவர் பழிவாங்கப்பட்டுள்ளார். எனவே, இந்த வழக்கு உச்சநீதிமன்றம் செல்லும்போது அவருக்குச் சாதகமான தீர்ப்புகிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
அரசு ஊழியர்கள் இரண்டாவது திருமணம் செய்து கொண்டால், வேலை நீக்கம் செய்ய சட்டத்தில் விதிமுறைஉள்ளது.
இப்போது அந்த தவறைச் செய்துள்ள முதல்வர் கருணாநிதி மீது முதல் மனைவி வழக்குத் தொடர்ந்தால்முதல்வர் பதவியை விட்டு விட்டு 7 ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டும்.
இவ்வாறு தவறு செய்துள்ள கருணாநிதி அரசுப் பதவியில் நீடிக்கலாமா? ஜெயலலிதா நீதிகேட்டு மக்களிடம் செல்லக்கூட வழி இல்லையா என்றார் அரங்கநாயகம்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications