அரியாசனம் யாருக்கு?
சென்னை:
சட்டசபைத் தேர்தலில் திமுக வெற்றி பெறும் என்று தமிழக உளவுப் பிரிவு போலீஸாரின் ரகசிய கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது. அதேசமயம், அதிமுக தரப்பு ஆச்சரியத்தைக் கொடுக்க வாய்ப்பு இருப்பதாகவும்எதிர்பார்க்கப்படுகிறது.
மே 10-ம் தேதி தமிழக சட்டசபைக்கு பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. திமுக, அதிமுக தலைமையில் இருகூட்டணிகளும், மதிமுக தனித்தும் தேர்தல் களத்தில் உள்ளன. திமுக கூட்டணியில் முக்கியக் கட்சியாகபாரதீய ஜனதாக் கட்சி உள்ளது. மற்ற கட்சிகள் அனைத்தும் புதிதாக முளைத்த அல்லது சிறிய கட்சிகள்.
அதிமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய பெரிய கட்சிகள் உள்ளன. இக்கூட்டணியே வெளியில் பார்ப்பதற்கு வலுவானகூட்டணியாகத் தோன்றுகிறது.
வைகோ என்ற தனி நபரின் செல்வாக்கு, திமுக கூட்டணியிலிருந்து திட்டமிட்டு கழற்றி விடப்பட்டவர்கள் என்றஅனுதாபம், கெட்ட பெயர் எடுக்காத கட்சி என்ற முத்திரைகளோடு களத்தில் நிற்கிறது மதிமுக.
வரும் சட்டசபைத் தேர்தல் வித்தியாசமான பல முடிவுகளைக் கொடுக்கப் போகிறது என்பது, ஜெயலலிதாவின்வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்ட அன்றே முடிவாகி விட்டது. ஜெயலலிதா போட்டியிடாத நிலையில், அதிமுககூட்டணி தேர்தலில் ஜெயித்து, பெரும்பான்மை பெற்றால் என்ன நடக்கும் என்ற கேள்வி பெரிதாகிக்கொண்டிருக்கும் நிலையில், அதிமுகவுக்கும், ஜெயலலிதாவுக்கும் ஆறுதல் தரும் வகையில் கருத்துக் கணிப்புமுடிவுகள் வெளியாகிக் கொண்டுள்ளன.
தமிழக உளவுத்துறை கணிப்புப்படி திமுகவுக்கு அதிக இடங்கள் கிடைக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.அதாவது, 120 இடங்கள் வரை திமுக கூட்டணி ஜெயிக்கலாம் என்று உளவுப் பிரிவினர் நடத்திய ரகசிய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
அதிமுக கூட்டணிக்கு 100 இடங்கள் வரை கிடைக்கலாம் என்றும் இந்தக் கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.திமுகவுக்கு தனி பெரும்பான்மை கிடைப்பதற்கான வாய்ப்பும் இல்லை என்று தெரிகிறது. திமுகவுக்கு தனிப்பெரும் கட்சி என்ற அந்தஸ்து கிடைக்கலாம். அந்தச் சூழ்நிலையில், கூட்டணிக் கட்சிகளின் உதவியுடன் கூட்டணிஆட்சி அமைக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் உளவுப் பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.
திமுகவுக்கு கடந்த தேர்தலில் இருந்த ஆதரவு இந்தத் தேர்தலில் பெரிதாகக் குறைந்து விட்டது எனவும் உளவுப்பிரிவு கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் திமுகவுக்குபல இடங்கள் கைவிட்டுப் போகும் நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதற்கு மதிமுக கூட்டணியில் இருந்துதூக்கி எறியப்பட்டதும் ஒரு காரணமாக அமையலாம் என்று தெரிய வந்துள்ளது.
வட மாவட்டங்களைப் பொறுத்தவரை, பாட்டாளி மக்கள் கட்சி இல்லாததும் அக்கூட்டணிக்கு பெரிய பலவீனமாகமாறியுள்ளது. அதே சமயத்தில், வட மாவட்டங்களில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு இணையான செல்வாக்கு பெற்றவிடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு கூட்டணியில் இருப்பதால் இதை ஓரளவு ஈடு கட்ட முடியும் என்றும் உளவுப்பிரிவு "பட்சிகள் தெரிவிக்கின்றன.
தென் மாவட்டங்களில் திமுகவுக்குச் சாதகமான மாவட்டங்களாக ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி,திருநெல்வேலி, விருதுநகர் ஆகிய மாவட்டங்கள் கருதப்படுகின்றன. மதுரையில் எதிர்பார்க்கும் அளவுக்குமுடிவுகள் இருக்காது என்று தெரிய வந்துள்ளது. மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் மற்றும் அதிமுகவுக்குஎதிர்பாராத அளவுக்கு அதிகரித்துள்ள ஆதரவு அலை ஆகியவை திமுகவுக்கு இங்கு சிக்கல் ஏற்படுத்தும் என்றுகணிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் அதிமுகவுக்கு சாதகமாக பல இடங்கள்கிடைக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. திருச்சி எம்.பி. தொகுதியில் பாரதீய ஜனதா வேட்பாளர் சுகுமாறன்நம்பியார், சிரமப்பட்டுத்தான் ஜெயிப்பார் என்று தெரிய வந்துள்ளது.
இதற்குக் காரணம், அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தலித் எழில்மலையின் கடும் போட்டிதான். தலித்எழில்மலைக்கே வெற்றி என்று அதிமுகவினர் பலமாக நம்புகிறார்கள். கடுமையாகவும் உழைக்கிறார்கள்.
கோயம்புத்தூர், நீலகிரி, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் திமுகவுக்கு ஓரளவு இடங்கள் கிடைக்கலாம்.இருப்பினும் இந்த மாவட்டங்களில் பாட்டாளி மக்கள் கட்சியும் ஓரளவு பாதிப்பை ஏற்படுத்தும் எனநம்பப்படுகிறது. கோவை மாவட்டத்தில் அதிமுக எதிர்பாராத வகையில் கூடுதல் இடங்களைக் கைப்பற்றும் வாய்ப்புஇருப்பதாகவும் தெரிகிறது.
நீலகிரி தேயிலை விவசாயிகள் ஒட்டுமொத்தமாக திமுக அரசுக்கு எதிராக இருப்பதால், அங்கு தமிழ் மாநிலகாங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் ஜெயிக்க வாய்ப்பிருக்கிறது. நீலகிரியில் தேயிலை விவசாயிகள் சங்கத்தலைவர் உச்சி கெளட பெரும் வெற்றி பெறுவார் என்று கூறப்படுகிறது. இவர் தமாகா சார்பில் போட்டியிடுகிறார்.
வட மாவட்டங்களில் திமுக, பாமக மற்றும் அதிமுக ஆகிய மூன்று கட்சிகளும் கடுமையான போட்டியில்உள்ளன. வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் திமுகவும், பாமகவும்கடுமையாக மோதுகின்றன.












Click it and Unblock the Notifications