வீரப்பன் காட்டில் துப்பாக்கி வெடித்ததில் விவசாயி காயம்
ஈரோடு:
வீரப்பன் புதைத்து வைத்திருக்கும் பணத்தை அதிரடிப்படை வீரருடன் தேடச் சென்ற விவசாயிக் கூலித் தொழிலாளிதுப்பாக்கி வெடித்து காயமடைந்தார்.
ஈரோடு மாவட்டம், பண்ணாரி காட்டுப் பகுதியில் அதிரடிப்படையினர் முகாமிட்டு வீரப்பனைத் தேடும்வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் வீரப்பன் புதைத்து வைத்திருக்கும் பணத்தைக் கண்டுபிடிக்க அதிரடிப்படையைச் சேர்ந்த தலைமைக்காவலர் ஒருவர் சில விவசாயக் கூலிகளை அழைத்துச் சென்றார். கோமாளம் அருகே உள்ள அரோபாளைத்தைச்சேர்ந்த நடராஜன் (36). சுக்ரி, பழனிச்சாமி ஆகியோரை சாமிநாதன் என்ற ஏட்டு கடந்த ஏப்ரல் மாதம் 29ம் தேதிஅழைத்துச் சென்றார்.
அவர்கள் தேவையான ஆயுதங்கள், நாட்டு வெடிகுண்டுகள், சமையலுக்குத் தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு பண்ணாரிக் காட்டுக்குள் புகுந்தனர். அங்கு ஒரு இடத்தில் தங்கினர். அப்போது நடராஜன், ஏட்டுசாமிநாதன் கொண்டு வந்திருந்த துப்பாக்கியைத் துடைத்துள்ளார்.
அப்போது துப்பாக்கியில் இருந்த ரவை எதிர்பாராதவிதமாக வெடித்துச் சிதறியுள்ளது. இந்த சிதறலில் நடராஜனின்இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டது. அப்போது ஏட்டு சாமிநாதன், நடராஜனுக்கு ரூ. 300 பணம் கொடுத்துயாரிடமும் இது பற்றி சொல்லக் கூடாது. போலீசில் புகார் கொடுக்கக் கூடாது எனக் கூறியுள்ளார்.
இது பற்றி அதிரடிப்படையினரும் அது போன்ற சம்பவம் எதுவும் நடக்கவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.ஆனால், ஈரோடு அரசு மருத்துவமனையில் நடராஜன் சிகிச்சை பெற்று வருகிறார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications