அடையாள அட்டை இருந்தும் ஓட்டு போட முடியாத 10,000 பேர்
கோவை:
கோவையின் பல இடங்களில் வாக்காளர் அடையாள அட்டை இருந்தும் கூட வாக்களிக்க இயலாத நிலைக்கு 10,000பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
வாக்காளர் பட்டியலில் பெயர்கள் இல்லை எனக் கூறி 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வாக்களிக்க முடியவில்லை.
இதனால் எரிச்சலடைந்த பொதுமக்கள் சாலை மறியல் செய்ய முயன்றனர்.
கோவையில் காலை முதலே பரபரப்பான ஓட்டுப் பதிவு துவங்கியது. 4 மணி நேரத்தில் ஓட்டுப்பதிவு 35 சதவீதத்தை நெருங்கியது.இந் நிலையில், கோவை கிழக்கு, கோவை மேற்கு , தொண்டமுத்தூர் ஆகிய தொகுதிகளில் பல வாக்களார்கள் தங்களுக்குவாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தும் அனுமதிக்கப்படவில்லை.
இதனால் ஒரு சில இடங்களில் பரபரப்பு ஏற்பட்டது.
மூன்று இடங்களில் எலெக்ட்ரானிக் இயந்திரங்கள் சரியாக இயங்காததால், அங்கு வேறு இயந்திரங்கள் மாற்றப்பட்டன. இந்தபூத்துகளில் 50 நிமிடங்கள் வாக்குப் பதிவில் தாமதம் ஏற்பட்டது.
அவிநாசி அருகே உள்ள ஒரு கிராமத்திற்கு தேர்தல் பணியாற்ற வந்த ஊர்க் காவல் படையைச் சேர்ந்த வீரர் ஒருவர், அந்தப்பகுதியில் சென்ற ஒரு பெண்ணை மானபங்கப்படுத்த முயன்றார். இதனால், அங்கு ஊர் மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.இதையடுத்து ஊர்காவல் படையைச் சேர்ந்த பாஸ்கரன் என்ற அவரை போலீசார் உடனடியாக கைது செய்தனர்.
தொண்டாத்தூர் தொகுதியில் வாக்களார் பெயர் பட்டியலில் பெயர்கள் விடுபட்டது பற்றிய புகாரை வேட்பாளர்களே நேரடியாகமாவட்ட கலெக்டரிடம் தெரிவித்தனர். சிறு சிறு பிரச்னைகள் எழுந்தபோதும் இது வரை வாக்குப் பதிவு சுமூகமாகவே நடந்துவந்துள்ளது.
வெயில் அதிகரிக்க அதிகரிக்க வாக்குச் சாவடிகளில் மக்கள் கூட்டமும் குறைந்து கொண்டு வந்தது. உச்சி வெயிலில் மக்கள்வாக்களிக்க ஆர்வம் காட்டவில்லை. எனவே, காத்திருந்த வரிசைகள் காலியானதோடு, ஒரு சிலரே வந்து செல்லும் நிலைஏற்பட்டுள்ளது.
பகல் ஒரு மணிக்கு மேல் வாக்குப்பதிவு மந்த நிலையை எட்டியுள்ளது. மாலையில் ஓரளவு வாக்குப் பதிவு நடைபெறும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.
-
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்!












Click it and Unblock the Notifications