மேற்கு வங்கம்: 3 மணிநேரத்தில் 20 சதவீத வாக்குப்பதிவு
கொல்கத்தா:
சட்டசபைத் தேர்தல் நடைபெறும் மேற்கு வங்க மாநிலத்தில் வாக்குப்பதிவு தொடங்கிய முதல் 3 மணி நேரத்தில் 20சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
மேற்கு வங்கத்தில் மொத்தம் 294 தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடந்து வருகிறது.
மொத்தம் 48. 7 மில்லியன் வாக்காளர்கள் வாக்களிக்கிறார்கள். மேற்கு வங்கத்தில் உள்ள 294 சட்டசபைத்தொகுதிகளிலும், மிட்னாப்பூர் நாடாளுமன்றத் தொகுதியிலும் தேர்தல் நடக்கிறது.
மிட்னாப்பூர் தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் இந்திரஜித் குப்தா மரணமடைந்து விட்டதால் அத்தொகுதிக்குஇடைத்தேர்தல் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுவரை மாநிலத்தின் எந்தப் பகுதியிலும் அசம்பாவிதச்சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை என்று போலீஸ் அதிகாரிகள் கருத்துத் தெரிவித்தனர்.
பிஜ்பூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜகதீஷ் தாஸ், அத்தொகுதியில் வாக்குச்சாவடி ஒன்றில்சிபிஐ எம் தொண்டர்கள் புகுந்து தகராறு செய்ததாக போலீஸ் நிலையத்தில் புகார் கூறியுள்ளார். அத்தொகுதிமுழுவதும் உள்ள 112 வாக்குச்சாவடிகளிலும் மறு தேர்தல் நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
நோவ்புரா தொகுதியில் உள்ள மகாதேவானந்தா கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் இரு அரசியல் கட்சித்தொண்டர்களிடையே தகராறு ஏற்பட்டதையடுத்து அங்கு ஒரு மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டது.
மேற்கு வங்காளத்தில்107 பெண் வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 1676 பேர் போட்டியிடுகின்றனர். மேற்குவங்காளத்தில் ஆளும் இடது முன்னணிக்கும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும் போட்டிநிலவுகிறது.
யு.என்.ஐ.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications