திமுக படுதோல்வி: 2 தொண்டர்கள் மரணம்

Subscribe to Oneindia Tamil

திருச்செங்கோடு:

தேர்தலில் திமுக கூட்டணி தோல்வியடைந்ததை அறிந்து வேதனையடைந்த இரண்டு தொண்டர்கள் மாரடைப்பால்இறந்தனர்.

திருச்செங்கோடு, தேவனாங்குறிச்சி அருகே உள்ள பனங்காட்டுப்பாளையம் என்ற பகுதியில் வசித்து வந்தவர்ரங்கசாமி (55). இவர் தேவனாங்குறிச்சியில் சலூன் கடை வைத்து நடத்தி வந்தார்.

திமுகவின் தீவிர உறுப்பினராக இருந்த இவர் எங்கு திமுக கூட்டம் நடந்தாலும் தவறாமல் கலந்து கொள்வார்.நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவிற்காக வீடு வீடாகச் சென்று தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டுவந்தார்.

திமுக அணி தான் வெல்லும், கருணாநிதி தான் முதல்வர் எனக் கூறி பலரிடம் பந்தயம் கட்டி வந்தார். ஆனால்,எதிர்பாராதவிதமாக தோல்வியடைந்தது.

இதை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. திமுக தோற்று விட்டது என நினைத்து வேதனையடைந்தார்.

பின்னர், பந்தயம் கட்டியபடி எல்லோருக்கும் பணத்தைக் கொடுத்தார். சிலருக்கு சாப்பாடு வாங்கிக் கொடுத்தார்.திமுகவின் தோல்வியை எண்ணி எண்ணி வேதனைப் பட்ட அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால்இறந்து போனார். திமுகவினர் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

இதேபோன்று ஏர்வாடி அருகே உள்ள சிறுமளஞ்சி கிராமத்தைச் சேர்ந்தவர் நம்பி (58). இவர் திருக்குறுங்குடியில்வசித்து வந்தார்.

இவர் ரேடியோவில் தேர்தல் முடிவுகளைக் கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது திமுக தோல்வியைஅதிர்ச்சியடைந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. தேர்தல் தோல்வியைத் தாங்க முடியாத அவருக்குமாரடைப்பு ஏற்பட்டது. இதில் அவர் இறந்து போனார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+