6 மாதத்துக்குள் எம்.எல்.ஏ. ஆவதில் பிரச்சனை இல்லை: ஜெ.
சென்னை:
அடுத்த 6 மாதத்துக்குள் எம்.எல்.ஏ.வாக ஆவதில் சிக்கல் எதுவும் இருக்காது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதாகூறினார்.
தமிழகத்தின் முதல்வராக இரண்டாவது முறையாகப் பதவியேற்றுக் கொண்டபிறகு ஜெயலலிதா புதன்கிழமை காலைஎம்.ஜி.ஆர்.சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் பேசுகையில், தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்டுள்ள நான் அடுத்த 6மாதத்துக்குள் எம்.எல்.ஏ.வாக ஆகி விடுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.
ஊழல் வழக்கில் தண்டனை பெற்றுள்ளதால் எனது வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இருப்பினும் அதிமுககூட்டணி அருதிப் பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ளது.
கவர்னர் எடுத்துள்ள முடிவை யாரும் குறை கூற முடியாது. ஏனெனில் கவர்னர் ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்நீதிபதியாக இருந்தவர். அவருக்கு எல்லா சட்ட நுணுக்கங்களும் தெரியும்.
அவரை யாரும் குறை கூற வேண்டிய அவசியம் இல்லை. அவருக்கு சட்டத்தைப் பற்றி யாரும் அறிவுரை கூறவேண்டிய அவசியம் இல்லை.
வெகு விரைவில் நான் பிரதமர் வாஜ்பாயை சந்தித்துப் பேசுவேன். பாண்டிச்சேரியில் காங்கிரஸ் கூட்டணிக்குஅதிமுக ஆதரவளிக்கத் தயாராக இருக்கிறது. இதுகுறித்து புதன்கிழமை பிரணாப் முகர்ஜியுடன் பேச்சுவார்த்தைநடத்தவுள்ளேன் என்றார்.
யு.என்.ஐ.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications