19-ம் தேதி அமைச்சரவை விரிவாக்கம்
சென்னை:
தமிழக அமைச்சரவை விரிவாக்கம் சனிக்கிழமை நடைபெறும் எனத் தெரிகிறது. புதிய அமைச்சர்கள் பதவியேற்புவிழாவுக்கான அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டு வருகிறது.
மே 10ம் தேதி நடந்த தேர்தலில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. ஜெயலலிதாமீண்டும் முதல்வராகியுள்ளார். முதல்வராகப் பதவியேற்றபோது அவருடன் 5 அமைச்சர்களும் பதவியேற்றனர்.விரைவில் அமைச்சரவை விரிவாக்கப்படும் என்று ஜெயலலிதா தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், 19ம் தேதி (சனிக்கிழமை) அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறும் எனத் தெரிய வந்துள்ளது.இதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டுள்ளன. முக்கியப் பிரமுகர்களுக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுவருகின்றன.
அமைச்சரவை விரிவாக்கத்தின்போது பல புதுமுகங்கள், பெண்கள் அமைச்சராகும் வாய்ப்பு உள்ளது.புதுமுகங்களுடன் சேர்த்து அனுபவசாலிகளுக்கும் போதிய இடங்கள் தரப்படும் என்று தெரிகிறது.
அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்ட பின்பு அனைத்து அமைச்சர்களுக்கும் இலாகாக்கள் ஒதுக்கித் தரப்படும்.மொத்தம் 25 அமைச்சர்கள் வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதற்கு மேல் போகாமல் பார்த்துக் கொள்ளஜெயலலிதா திட்டமிட்டுள்ளார்.
புதிய எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு விழா மே 24ம் தேதி நடைபெறும். அன்று தற்காலிக சபாநாயகர் பதவியேற்பார்.அதன் பின்பு எம்.எல்.ஏக்கள் பதவியேற்பர். முதல்வர் ஜெயலலிதா எம்.எல்.ஏவாக இல்லை என்பதால் அவர் மட்டும்அன்று பதவியேற்க மாட்டார்.
25-ம் தேதி சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்வு நடைபெறும். சபாநாயகர் பதவிக்கு அதிமுக அவைத்தலைவர் கா.காளிமுத்துவை ஜெயலலிதா தேர்வு செய்து வைத்துள்ளார். துணை சபாநாயகர் பதவிக்கு ஓமலூர்எம்.எல்.ஏ. செம்மலை பட்டியலில் உள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications