மார்க்சிஸ்ட் பிரமுகரை குண்டு வீசி கொல்ல முயற்சி
புதுக்கோட்டை:
அறந்தாங்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவரை கொலை செய்ய நடந்த முயற்சியில் அவர்அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
புதுக்கோட்டை அறந்தாங்கி அருகே உள்ள எரிச்சி கிராமத்தைச் சேர்ந்த பழனிவேல், மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றியகுழு உறுப்பினராக இருக்கிறார்.
வியாழக்கிழமை நள்ளிரவு பழனிவேல் தனது குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது சிலர்அவரது வீட்டின் கூரையை பிரித்துக் கொண்டு உள்ளே இறங்க முயன்றனர். ஆனால் அவர்களால் உள்ளே இறங்கமுடியவில்லை.
உடனே அவர்கள் கையிலிருந்த நாட்டு வெடிகுண்டை உள்ளே வீசினர். குறி பார்த்து வீச முடியாததால் அந்த குண்டுபழனிவேல் மீது விழாமல் அருகிலிருந்த தாழ்வாரத்தில் விழுந்து வெடித்தது. குண்டு வெடிப்பில் யாருக்கும் காயம்ஏற்படவில்லை.
குண்டு வெடித்த சத்தம் கேட்டு எழுந்த பழனிவேல், தனது வீட்டின் ஓட்டிலிருந்து சிலர் தப்பி ஓட முயன்றதைக்கண்டு அவர்களை துரத்திச் சென்று பிடிக்க முயன்றார். ஆனால் அவர்கள் தப்பி ஓடி விட்டனர்.
குண்டு வீச்சால் வீட்டின் பெரும்பகுதி சேதமடைந்தது. தன்னைக் கொல்வதற்காக குண்டு வீச்சு நடத்தப்பட்டதாகபழனிவேல் அறந்தாங்கி போலீசில் புகார் செய்தார்.
தாக்குதல் நடந்த இடத்தை அறந்தாங்கி போலீஸ் டி.எஸ்.பி. நேரில் பார்வையிட்டார். குண்டு வீசித் தாக்குதல்நடத்தியவர்கள் விட்டுச் சென்ற ஒரு ஜோடி செருப்பு கண்டு பிடிக்கப்பட்டது. அங்கு மேலும் கிடைத்த தடயங்களைக்கொண்டு குற்றவாளிகளை பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications