பாண்டி. முதல்வராக சண்முகம் தேர்வு
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியின் தற்போதைய முதல்வர் சண்முகமே மீண்டும் முதல்வராகிறார்.
டெல்லியில் மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் தலைமையில் நடந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்கூட்டத்தில் சண்முகத்தை மீண்டும் பாண்டிச்சேரி முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பது என முடிவு செய்யப்பட்டது.
முன்னதாக, அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி தற்போதைய முதல்வர் சண்முகத்தையேபாண்டிச்சேரி காங்கிரஸ் சட்டசபைக் குழுத் தலைவராக நீட்டிக்கும்படி கேட்டுக் கொண்டார்.இதையடுத்துபாண்டிச்சேரி முதல்வராகிறார் சண்முகம்.
முதல்வர் பதவிக்கு ஏற்கனவே முன்னாள் முதல்வர் வைத்தியலிங்கம் மற்றும் பாண்டிச்சேரி காங்கிரஸ் கட்சித்தலைவர் நாராயணசாமி ஆகியோரின் பெயர்கள் சிபாரிசு செய்யப்பட்டிருந்தது நினைவிருக்கலாம்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications