பரிதி கைது: தலைவர்கள் கண்டனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சட்டசபையின் முன்னாள் துணை சபாநாயகர் பரிதி இளம்வழுதியை போலீஸார் கைது செய்திருப்பதுகண்டனத்திற்குரியது என்று தமிழக பாஜக பொதுச் செயலாளர் இல. கணேசன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை:

பரிதி ஒரு வித்தியாசமான அரசியல்வாதி. வன்முறையில் ஈடுபடாத பண்பாளர் என்பது அவரை நன்குஅறிந்தவர்களுக்குத் தெரியும்.

அவர் தாக்குதலில் ஈடுபட்டார் என்பது பொய் என்று மக்கள் நிச்சயம் உணர்வார்கள்.

ஜான் பாண்டியன்தான் அவரைத் தாக்க வந்தார் என்பதையும், பரிதி உயிர் தப்பி ஓடியதையும் அனைவரும்அறிவர்.

பழிவாங்கும் நோக்கத்தோடு பரிதியைக் கைது செய்து சிறையில் அடைத்திருப்பது அநியாயமானது என்றார் இல.கணேசன்.

திருநாவுக்கரசு கண்டனம்

பரிதியைத் தாக்கியவர்கள் மீது ஏற்கனவே வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நடவடிக்கையும் எடுக்கப்பட்டு விட்டது.ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர், பரிதிதான் மற்றவர்களைத் தாக்கினார் என்று அவர் மீது பொய் வழக்குப்பதிவு செய்து, அவரைக் கைது செய்திருப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது என்று கூறியுள்ளார் எம்ஜிஆர்அதிமுக பொதுச் செயலாளர் திருநாவுக்கரசு.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+