கடன் தொல்லையால் 3 பேர் தற்கொலை

Subscribe to Oneindia Tamil

சேலம்:

கடன் தொல்லை காரணமாக சேலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

சேலத்தில் உள்ள மெய்யனூர் பனங்காட்டில் வாழ்ந்து வருபவர் கிருஷ்ணன். இவர் போட்டோ ஸ்டூடியோ நடத்திவருகிறார். இவரது மனைவியின் பெயர் விஜயா.

இவர்களுக்கு பிரேமா (வயது 25), உமா (வயது 21) என்ற இரு மகள்களும், லவகுமார் (வயது 18) என்ற ஒருமகனும் உள்ளனர். உமா தபால் மூலம் பி.காம் படித்து வந்தார். குமார் ப்ளஸ் 1லிருந்து ப்ளஸ் 2 படித்து வந்தார்.

குடும்ப பொறுப்பை விஜயாதான் கவனித்து வந்தார். இவர்கள் புதிய வீடு கட்டியதால் கடன் ஏற்பட்டது.வியாழக்கிழமை இரவு கிருஷ்ணன் ரூ 30,000ஐ தன் மனைவியிடம் கொடுத்துவிட்டு வீட்டின் மாடியில் சென்றுபடுத்துக் கொண்டார்.

அவர் மறுநாள் காலை கீழே இறங்கி வந்து கதவை பல முறை தட்டியும் கதவு திறக்கவில்லை. அவர் ஜன்னல்வழியாக பார்த்த போது தனது மனைவியும், மகளும், மகனும் மின்விசிறியில் தூக்கில் தொங்குவதை கண்டுஅதிர்ச்சியடைந்தார்.

அவர் உடனே பள்ளப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ ஆகியோர் விசாரணைநடத்தினர். இந்த விசாரணையில் விஜயா, உமா, குமார் ஆகிய மூவரும் ஒரு வாரம் முன்பே தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்து விட்டதாக தெரிய வந்தது.

வியாழக்கிழமை இவர்கள் மூவரும் கோவிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பி அனைவரும் தூங்கிய பின்மின்விசிறியில் இருக்கும் மூன்று இறக்கைகளிலும் சேலை மூலம் தூக்கு போட்டு தொங்கியுள்ளனர் எனவும் தெரியவந்தது.

அவர்கள் மூவரும் கிருஷ்ணனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தங்கள் சாவுக்கு கிருஷ்ணன் எந்த விதத்திலும்காரணமில்லை எனவும், கடன் தொல்லையால் தாங்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் எழுதியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+