ஊழலை மக்கள் ஏற்றுக் கொண்டு விட்டனர்: விட்டல் வருத்தம்

Subscribe to Oneindia Tamil

கோவை:

உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள் பெரிய ஊழல் செய்து சிறிய தண்டனை பெற்றாலும் அதை பிராயச்சித்தமாகஏற்றுக் கொண்டு மக்கள் அவரை மீண்டும் தேர்வு செய்துள்ளனர் என மத்திய லஞ்ச ஊழல் ஒழிப்புத் துறைகமிஷனர் விட்டல் பேசினார்.

கோவையில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்ட மத்திய லஞ்ச ஒழிப்பு துறை கமிஷனர் என்.விட்டல்பேசியதாவது:

மக்கள் அன்றாடம் நடக்கும் சிறிய லஞ்ச ஊழலால் வெறுப்படைந்துள்ளனர். இது ஆட்சி மாற்றத்திற்கு காரணமாகஅமைகிறது. தேர்தல் சமயத்தில் குடிநீர் பிரச்னைக்கும், இருப்பிடத்திற்கும், தெரு விளக்கிற்கும், சாலை வசதிக்குமட்டுமே மக்கள் முக்கியத்துவம் அளிக்கின்றனர்.

ஆனால் ஊழலை பெரிய பிரச்னையாக எடுத்துக் கொள்வதில்லை. ஊழலுக்கு முன்னுரிமை கொடுத்தால்,அடிப்படை வசதிகள் தானாக வந்து சேரும் என்பதை அவர்கள் உணரவில்லை.

உயர்ந்த இடத்தில் இருப்பவர் பெரிய ஊழல் செய்து சிறு தண்டனை கிடைத்தாலும், அதனை பிராயசித்தமாகஏற்றுக் கொண்டு அவரை மீண்டும் தேர்வு செய்கின்றனர். லஞ்சத்தை மக்கள் சகித்துக் கொள்ள காரணம், இந்துதர்மத்தில் உள்ள பிராயச்சித்தம் என்ற கொள்கை.

அரசியல் நடத்தப் பணம் வேண்டும். அதற்கு கருப்புப் பணம் தான் பிராணவாயுவாக இருந்து வருகிறது. இதனால்தான் எல்லாக் கட்சிகளுமே ஊழல் கட்சிகள் என மக்கள் உணர்ந்துள்ளனர். ஊழலை ஒழிக்கா விட்டால் நேரிடும்ஆபத்து குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த யாரும் முன் வருவதில்லை.

பெரிய ஊழல்களை விட, சிறிய ஊழல்கள் தான் அவர்களிடையே பெரும் சக்தியாகத் தெரிகிறது. இதுவே ஆட்சிமாற்றத்திற்கும் காரணமாக அமைகிறது. ஊழலை ஒழிக்க அரசியல் கட்சிகள் முன்வர வேண்டும். அப்போது தான்மக்களின் நம்பிக்கையைப் பெற முடியும் என்றார் விட்டல்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+