குரங்கு மனிதனின் தாக்குதலிலிருந்து தப்பிய சனிக்கிழமை

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

டெல்லியில் குரங்கு மனிதனின் தாக்குதல் குறைந்துள்ளது. குரங்குமனிதனின் தாக்குதல்இல்லாமல் அமைதியான தினமாக சனிக்கிழமை கழிந்தது.

குரங்குமனிதனைக் கண்டுபிடிப்பதில் போலீசார் தீவிரமாக இருக்கின்றனர்.

சென்ற வார ஆரம்பத்திலிருந்தே கருங்குரங்கு போல் தோற்றமளிக்கும் உருவம்டெல்லியில் மொட்டை மாடிகளிலும், வெளியிலும் தூங்குபவர்களை தாக்கி வந்தது.குறிப்பாக இந்த தாக்குதல் டெல்லியின் கிழக்கு பகுதியிலும், மேற்கு பகுதியிலும்அதிகமாக நடந்தது.

இதையடுத்து அந்த மர்ம மனிதனை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்துவருகிறார்கள்.

பொதுமக்களும் பெரிய பெரிய கம்புகளுடன் இரவு நேரங்களில் குரங்கு மனிதனைத்தேடி ரோந்து செல்ல ஆரம்பித்தனர்.

அந்த உருவத்தை பற்றி எந்த விதமான உறுதியான தகவலும் கிடைக்காவிட்டாலும்போலீசார் அந்த மனிதனை பிடிக்க முயன்று வருகின்றனர்.

அந்த மனிதனை பற்றி சரியான தகவல் கொடுத்தால் ரூ.50,000 பரிசளிக்கப்படும்எனவும் போலீசார் அறிவித்துள்ளனர்.

இதையடுத்து போலீசாருக்கு தொலைபேசி தகவல்கள் குவியத் தொடங்கின.

இதுகுறித்து, டெல்லி துணை போலீஸ் கமிஷனக் மனோஜ் லால் கூறுகையில், குரங்குமனிதனைப் பற்றி வரும் தகவல்கள் அனைத்தும் புரளியாகவே உள்ளன. உண்மைதகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.

சனிக்கிழமை வரை போலீசாருக்கு 347 தொலைபேசி அழைப்புகள் வந்கதுள்ளன.இவற்றில், 298 தொலைபேசி அழைப்புகள் குரங்கு மனிதனைப்பற்றி தவறானதகவல்களையே கொடுத்தன.

இதுவரை, 64 பேர் குரங்குமனிதனால் தாக்கப்பட்டதாகவும் தொலைபேசி மூலம்தகவல்கள் வந்தன. ஆனால் மருத்துவ பரிசோதனை அறிக்கையின்படிகாயமடைந்தவர்கள் மிருகத்தால் தாக்கப்படவில்லை எனத் தெரிகிறது.

தவறான தகவல் தந்ததற்காகவும், வன்முறையில் ஈடுபட்டது தொடர்பாகவும் இதுவரை19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாங்கள் செய்த விசாரணையிலும் 60 பேர் மட்டுமே கருங்குரங்கு போல்தோற்றமளிக்கும் குரங்கு மனிதனை பார்த்துள்ளனர். மற்றவர்கள் அனைவரும் குரங்குபோன்ற மனிதன் தங்களை தாக்கியாதக கற்பனை செய்து கொண்டுள்னர்.

தற்போது குரங்கு மனிதன் பற்றிய தகவல்களும், குரங்கு மனிதன் தாக்கியதாக வரும்தகவல்களும் குறைந்துளளன என்றார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+