கல்லூரி மைதானத்தில் பெண் பிணம்
சென்னை:
சென்னையிலுள்ள ஒரு கல்லூரி மைதானத்தில் அடையாளம் தெரியாத இளம் பெண்ணின் பிணம்கண்டுபிடிக்கப்பட்டது.
சென்னை அருகேயுள்ள மேடவாக்கத்தில் அரசு கல்லூரி உள்ளது. இது ஆடவர், மகளிர் படிக்கும் கல்லூரியாகும்.கல்லூரிக்கு தற்போது விடுமுறையாகும்.
ஞாயிற்றுக்கிழமை இரவு கல்லூரி வாட்ச்மேன் வழக்கம் போல காவல் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போதுகல்லூரி மைதானத்தின் பக்கமிருந்து இரண்டு வாலிபர்கள் வந்தனர்.
அவர்கள் வாட்ச்மேனை அணுகி, கல்லூரி மைதானத்திற்குள் ஒரு பெண்ணின் பிணம் கிடப்பதாக தெரிவித்தனர்.அவர்கள் யார் என்று வாட்ச்மேன் கேட்டதற்கு சரியாக பதிலளிக்காமல் தாங்கள் வெளியில் நிறுத்தியிருந்தமோட்டார் சைக்கிளில் ஏறிச் சென்று விட்டனர்.
அவர்கள் சென்ற பின் வாட்ச்மேன், இன்னொரு நபரை உதவிக்கு அழைத்துக் கொண்டு மைதானத்திற்குச் சென்றுபார்த்தார். அப்போது அங்கிருந்த புதருக்குள் ஒரு இளம் பெண்ணின் பிணம் கிடந்தது தெரிய வந்தது. உடனடியாகஇதுகுறித்து பள்ளிக்கரணை போலீஸில் வாட்ச்மேன் புகார் கொடுத்தார்.
போலீஸார் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்து கிடந்த இளம் பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. சுடிதார் அணிந்துள்ள அந்தப்பெண் யார் என்று தெரியவில்லை. இதுகுறித்து மடிப்பாக்கம் டி.எஸ்.பி. கே.ராமச்சந்திரன் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. மோட்டார் சைக்கிளில் மறைந்த வாலிபர்களைத் தேடவும்உத்தரவிடப்பட்டுள்ளது.
பஸ் ஸ்டாப்பில் பிணம்:சென்னை ஆயிரம் விளக்கு பஸ் ஸ்டாப்பில் 30 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடந்தது. இவர் யார் என்றுதெரியவில்லை. வெயிலுக்கு பலியாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இறந்த நபர் அழுக்கான கைலியும், டீசர்ட்டும் அணிந்திருந்தார்.
இதுகுறித்து ஆயிரம் விளக்கு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications