மலேசியாவில் 4 வது தமிழ் இணைய மாநாடு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

4வது தமிழ் இணைய மாநாடு வரும் ஆகஸ்டு மாதம் 26 முதல் 28ஆம் தேதி வரை மலேசியாவில் நடக்கிறது.

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலுள்ள புத்ரா வர்த்தக மையத்தில் இம்மாநாடு நடைபெறும் என்று உலகத்தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றத் தலைவர் மு. அனந்தகிருஷ்ணன் மற்றும் சர்வதேச மாநாட்டு ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் முத்து நெடுமாறன் ஆகியோர் சனிக்கிழமை தெரிவித்தனர்.

சென்னையில் அவர்கள் நிருபர்களிடம் மேலும் கூறியதாவது:

"முன்னேற்றத்துக்கான முன்னோடிகள்" என்பதை மையமாகக் கொண்டு இம்மாநாடு நடக்கவிருக்கிறது.

இம்மாநாட்டில் நடைபெறும் ஒரு கருத்தரங்கில் 50க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படஉள்ளன. மல்டி மீடியா, டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பங்கு, தொழில் முனைவோர் மேற்கொள்ள வேண்டியதொழில்நுட்ப ரீதியான சிக்கன நடவடிக்கைகள், தொழில்நுட்பத்தில் தமிழ் இணையங்களின் பங்கு போன்றவைகுறித்து இக்கருத்தரங்கில் விவாதிக்கப்படும்.

"துனியா வெப் 2001" என்ற சர்வதேச கம்ப்யூட்டர் கண்காட்சியும் இம்மாநாட்டின்போது நடைபெறும்.

இக்கண்காட்சியில் பல நாடுகளில் பயன்படுத்தப்படும் மின்னணுத் தொழில்நுட்பங்கள் இடம்பெறும். தமிழகத்தைச்சேர்ந்த மென்பொருள் தயாரிப்பாளர்கள் உருவாக்கியுள்ள தமிழ் மென்பொருள்களும் கண்காட்சியில்இடம்பெறும்.

கம்ப்யூட்டரில் தமிழ் மென்பொருள் ஆய்வு செய்த சிறந்த 5 தமிழக மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, இலவசமாகஇம்மாநாட்டுக்கு அழைத்துச் செல்லத் திட்டமிடப்பட்டுள்ளது.

இம்மாநாடு குறித்த விவரம் வேண்டுபவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: 3742471,3741053. ஈ-மெயில்: [email protected]

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+