"கஜானாவை காலி செய்து விட்டார் கருணாநிதி
சென்னை:
தமிழக அரசின் கஜானாவை காலி செய்து விட்டுப் போய் விட்டார் கருணாநிதி என்று மாநில நிதியமைச்சர்சி.பொன்னையன் கூறியுள்ளார்.
நிதியமைச்சராகப் பதவியேற்ற பின்பு அமைச்சர் பொன்னையன் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களுக்கு முதல்முறையாகப் பேட்டி கொடுத்தார். அப்போது அவர் கூறுகையில், மே 14-ம் தேதி ஆட்சியை விட்டு கருணாநிதிபோனபோது கஜானாவையும் காலி செய்து விட்டுப் போய் விட்டார்.
ரூ. 250 கோடிக்கு பற்றாக்குறையை ஏற்படுத்தி விட்டது திமுக அரசு. இந்தியாவிலேயே அதிகம் வரிகள்விதிக்கும் மாநிலம் தமிழகம்தான். இந்த நிலையில் நான் வேறு வரிகள் போட்டு மக்களை சிரமப்படுத்தவிரும்பவில்லை.
இருப்பினும் வளர்ச்சித் திட்டங்களுக்கு இப்போதுள்ள நிதி வசதி போதாது. எனவே எங்கெல்லாம் பணம் திரட்டமுடியுமோ அந்த வழிகளில் நிதியாதாரத்தை சீர் செய்வோம்.
தமிழக போக்குவரத்துத் துறை ரூ. 2200 கோடி நஷ்டத்தில் உள்ளது. மின்சாரத் துறைக்கு ரூ. 800 கோடி மானியம்வழங்கப்படுகிறது. இது இலவச மின்சாரத்திற்கான செலவாகும்.
லாபத்தில் இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாரிடம் விற்கும் எண்ணம் எங்களது அரசுக்குஇல்லை என்றார் அவர்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications