குற்றங்களை குறைத்த குரங்கு மனிதன்
டெல்லி:
டெல்லியில் கிலியை ஏற்பபடுத்தியுள்ள குரங்கு மனிதன் இன்னும் பிடிபடவில்லை. எந்த விதமான சரியானதகவல்களும் இல்லாமல் போலீசார் தவித்து வருகிறார்கள். ஆனாலும் குரங்கு மனிதனின் தாக்குதலுக்கு பின்டெல்லியில் குற்றங்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது.
கிழக்கு டெல்லி பகுதியில் குரங்கு மனிதன் என அழைக்கப்படும் மர்ம மனிதன் பலரையும் தாக்கி வந்தான். இதனால்பொதுமக்கள் தூக்கமிழந்து அச்சத்தில் தவித்தனர்.
குரங்கு மனிதனின் தாக்குதல் கவலையளித்தாலும் டெல்லியில் நடந்து வந்த குற்றங்கள் குறைந்துள்ளதுமகிழ்ச்சியளிக்கும் விதமாக அமைந்துள்ளது.
கிழக்கு டெல்லி பகுதியில் இந்த மாதம் 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடந்த குற்றங்களின் விவரம்:
15 திருட்டுகள்
வாகனத்திருட்டு 45
16 இடங்களில் கொள்ளைச் சம்பவங்கள் நடந்துள்ளன.
ஆனால் குரங்கு மனிதனின் தாக்குதல் தொடங்கியபின் குற்றங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இநத் காலகட்டத்தில் குற்றச் சம்பவங்கள் 8 மட்டுமே நடந்துள்ளது.
இது குறித்து கிழக்கு டெல்லியின் போலீஸ் அதிகாரி மனோஜ் குமார் லால் கூறுகையில், போலீசாரின் தொடர்கண்காணிப்பு கராணமாக குற்றங்கள் குறைந்துள்ளன என மக்கள் கருதுகிறார்கள். திருடர்களும் திருடச் செல்லும்போது தாங்களும் தாக்கப்படுவோம் என்ற அச்சம் காரணமாக அவர்களும் குற்றங்களில் ஈடுபடுவதைதவிர்த்திருக்கலாம்.
மக்களில் பலரும் ஒரு சமயத்திலோ அல்லது மற்ற சமயத்திலோ விழித்துக் கொண்டிருக்கிறார்கள். 24 மணி நேரமும்மக்கள் விழித்துக் கொண்டிருப்பதாலும் குற்றங்கள் குறைவதற்கான காரணமாகும் என்றார்.
கிழக்கு டெல்லியில் வசிக்கும் ஒருவர் கூறுகையில், இந்த பகுதியில் இரவு நேர காவலர்களும், பொதுக்களும்,சுறுசுறுப்பாகவும், விழிப்புணர்வுடனும் இருக்கிறார்கள் என்றார்.
குரங்கு மனிதனின் தாக்குதல் அச்சத்தை ஏற்படுத்தினாலும், குற்றங்கள் குறைய இது வழி வகுத்துள்ளது என்பதுமறுக்க முடியாத உண்மை.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications