பாண்டி. முதல்வருக்கு ஏற்பட்ட நூதன சிக்கல்
சென்னை:
பாண்டிச்சேரி முதல்வராக மீண்டும் பதவியேற்கவுள்ள ப.சண்முகத்திற்கு நூதனமான சோதனை ஏற்பட்டுள்ளது.
பாண்டிச்சேரியில் தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் அ.தி.மு.க ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் காங்கிரஸ் கூட்டணிஆட்சி அமைக்கவுள்ளது. முதல்வராக மீண்டும் ப.சண்முகம் பொறுப்பேற்கவுள்ளார்.
முதல்வர் பதவியேற்கவுள்ள சண்முகம் இப்போது எம்.எல்.ஏவாக இல்லை. எனவே 6 மாதத்திற்குள் ஏதாவது ஒருதொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றால்தான் அவரது முதல்வர் பதவி நிலைக்கும். இல்லாவிட்டால் பதவிகாலியாகி விடும்.
இந்த இடத்தில்தான் சிக்கல் எழுந்துள்ளது. சண்முகம் போட்டியிடுவதற்கு வசதியாக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்யாரும் ராஜினாமா செய்து தொகுதி தானம் செய்யத் தயாரில்லை என்று தெரிகிறது. இதனால் சண்முகம்குழப்பத்தில் ஆழ்ந்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி ஜெயித்துள்ள 11 தொகுதிகளில் 3 தொகுதிகள் தனித் தொகுதிகள். பிற தொகுதிகளில் முன்னாள்முதல்வர் வைத்தியலிங்கம், அமைச்சர் ரங்கசாமி, முன்னாள் முதல்வர் பாரூக் மகன் வெற்றி பெற்ற தொகுதிஆகியவை சண்முகத்திற்குக் கிடைக்காது. மற்ற தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்காது.
இந்த வினோதமான சூழ்நிலையால் சண்முகம் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 2எம்.எல்.ஏக்கள் மட்டுமே உள்ளனர். எனவே அவர்களும் தங்களது தொகுதியைத் தருவதாக இல்லை.
இந்த நிலையில் அ.தி.மு.கவின் உதவியை நாடுவதைத் தவிர சண்முகத்திற்கு வேறு வழியில்லை. அ.தி.மு.க.ஜெயித்த 3 தொகுதிகளில் மண்ணடிப்பட்டு தொகுதி தனக்கு சாதகமாக இருக்கும் என்று சண்முகம் நினைக்கிறார்.ஆனால் இங்கு ஜெயித்துள்ளவர் முன்னாள் முதல்வரும், சட்டசபை அ.தி.மு.க தலைவருமானடி.ராமச்சந்திரன். அவர் தனக்காக ராஜினாமா செய்வாரா என்ற குழப்பத்தில் இருக்கிறார் சண்முகம்.
இதுகுறித்து விவாதிக்கவே சென்னைக்கு வந்துள்ளார் சண்முகம். தனக்காக டி.ராமச்சந்திரன் தொகுதியைத் தரவேண்டும் என்று ஜெயலலிதாவிடம் அவர் கோரிக்கை வைத்திருப்பதாகத் தெகிகிறது. ஜெயலலிதா சொன்னால்டி.ராமச்சந்திரன் கேட்பார் என்பதால் ஜெயலலிதா முலம் காய் நகர்த்த முயல்கிறார் சண்முகம்.
இதுதவிர அ.தி.மு.கவையும் அமைச்சரவையில் சேருமாறு சண்முகம் அழைப்பு விடுத்துள்ளார். இந்தக்கோரிக்கையை ஜெயலலிதா ஏற்றாரா என்பது தெரியவில்லை.
சண்முகத்திற்கு ஏற்பட்டுள்ள நூதனமான சிக்கல் தீருமா என்பது நாள் போகப் போகத்தான் தெரியும்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications