ஜெ. முதல்வராக செயல்படுவதை எதிர்த்து வழக்கு
சென்னை:
ஊழல் வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றதை ரத்து செய்யும்படிகோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
ஊழல் வழக்கில் ஜெயலலிதாவுக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவரால் தேர்தலில்போட்டியிட முடியவில்லை. இருப்பினும், சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணி அறுதிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. ஜெயலலிதா சட்டசபை அதிமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.இதையடுத்து அவரை முதல்வராகப் பதவியேற்கும்படி ஆளுநர் பாத்திமா பீவி அழைப்பு விடுத்தார்.
இந்த நிலையில், ஜெயலலிதா முதல்வராகப் பதவி வகிப்பது முறைகேடானது எனவே அவர் முதல்வராகசெயல்பட தடை செய்ய வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வராஜ் என்பவர் இதுதொடர்பாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் ராஜன் மற்றும்சிவசுப்ரமணியம் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பு கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:
ஜெயலலிதா முதல்வராக செயல்பட்டால் அவர் மீது தொடரப்பட்டுள்ள ஊழல் வழக்குகளில் தீர்ப்பு வெளியாவதுபாதிக்கப்படும். நீதிபதிகள் தீர்ப்புகளை வெளியிடுவதற்கு அஞ்சுவார்கள்.
ஜெயலலிதா மீது ஊழல் வழக்கு தொடர அனுமதி அளித்த ஆளுநரே அவருக்கு முதல்வராகப் பதவிப்பிரமாணம்செய்து வைத்திருப்பது சட்டவிரோதமானது என்று கூறியுள்ளார்.
மனுவை ஏற்ற நீதிபதிகள், கோடை விடுமுறைக்குப் பின் இந்த வழக்கின் விசாரணை தொடரும் என்றுஅறிவித்தனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications