மின் ஊழியர் போராட்டம் .. இதுவரை நஷ்டம் ரூ. 250 கோடி
சென்னை:
நெய்வேலி அனல் மின் நிலைய ஊழியர்கள் போராட்டம் தீவிரமடைகிறது. போராட்டத்தின் காரணமாக மின்உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
நெய்வேலி பழுப்பு நிலக்கரி கழக ஊழியர்கள் ஊதிய விகிதத்தை மாற்றக் கோரி போராட்டம் நடத்திவருகிறார்கள். முதலில் விதிப்படி வேலை என்ற போராட்டத்தை மேற்கொண்ட இவர்கள் தற்போதுகாலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக நெய்வேலி மின் உற்பத்தி நிலையத்தில் மின் உற்பத்தி கடுமையாகபாதிக்கப்பட்டுள்ளது. நிலையத்தில் உள்ள 2 அனல் மின் நிலையங்களிலிருந்து மொத்தம் 2070 மெகாவாட்மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தியாகும் மின்சாரம் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா,பாண்டிச்சேரி ஆகிய மாநலங்களுக்கு வழங்கப்படுகிறது.
வேலைநிறுத்தம் காரணமாக தற்போது முதல் மின்உற்பத்தி நிலையம் முழுமையாக இயங்கவில்லை. 2-வதுநிலையத்தில் உற்பத்தி கிட்டத்தட்ட முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு 220 மெகாவாட் மின்சாரம் மட்டுமேஉற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டின் தினசரி மின்தேவை 6200 மெகாவாட் ஆகும். இதில் நெய்வேலியிலிருந்து 700 மெகாவாட்மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. இந்த அளவு இப்போது குறைந்து விட்டது. இதேபோல, பிற தென்மாநிலங்களுக்குரிய அளவும் குறைந்து விட்டது. இதுவரை வேலைநிறுத்தம் காரணமாக ரூ. 50 கோடியும், நிலக்கரிவெட்டி எடுக்கப்படதாததால் ரூ. 200 கோடியும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே தமிழக மின் தேவையை சமாளிப்பதற்காக கேரளம் மற்றும் மகாராஷடிர மாநிலங்களின் தலா 100மெகாவாட் மின்சாரம் தந்து உதவுமாறு முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார். இதை இரு மாநிலஅரசுகளும் ஏற்றுக் கொண்டுள்ளதாக மின்வாரியத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications