இந்திய கைதிகளை விடுவிக்க வங்கதேச கோர்ட் உத்தரவு
டாக்கா:
டாக்கா மத்தியச் சிறைச்சாலையில் தண்டனை பெற்ற 29 வெளிநாட்டுக் கைதிகளை உடனடியாக விடுவிக்குமாறுவங்காளதேச உள்துறை அமைச்சகத்திற்கு அந்நாட்டு கோர்ட் ஒன்று உத்தரவிட்டுள்ளது.
இக்கைதிகளில் பெரும்பான்மையானவர்கள் இந்தியா மற்றும் மியான்மர் நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
தண்டனை காலம் முடிந்த பிறகும் அக்கைதிகளை சிறையிலேயே வைத்திருந்ததால், இத்தகைய உத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட தூதரகங்கள் இக்கைதிகளின் விடுதலை குறித்து அதிக அக்கறை காட்டாமல் இருந்ததால், அவர்கள்சிறையிலேயே வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக இந்தியத் தூதரக அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, இக்கைதிகளின் மேல் ஆதாரமில்லாதகுற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இதுபோன்ற புகார்கள் வரும்போது உடனடியாக நாங்கள் நடவடிக்கைஎடுத்திருக்கிறோம் என்றார் அந்த அதிகாரி.
அந்தந்த தூதரகங்கள் மூலமாகக் கைதிகளை அவர்களுடைய நாடுகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றுஉள்துறை அமைச்சகத்தை அந்தக் கோர்ட் கேட்டுக் கொண்டது. அதுவரை, உள்துறை அமைச்சகத்தின்பாதுகாப்பிலேயே அந்த 29 கைதிகளையும் வைத்திருக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
சம்பந்தப்பட்ட தூதரகங்களிடமிருந்து தகவல் எதுவும் வரவில்லை என்றால், அரசே முன் வந்து, தண்டனை முடிந்தஒரு மாதத்திற்குள் அக்கைதிகளை அவர்களுடைய நாடுகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் கோர்ட்உத்தரவிட்டது.
வங்காளதேச சிறைச்சாலையில் 142 இந்தியர்கள் உள்பட 851க்கும் மேற்பட்ட வெளிநாட்டுக் கைதிகள்இருப்பதாகக் கூறப்படுகிறது. இவர்களில் பெரும்பாலானவர்களுக்குத் தண்டனைக் காலம் முடிந்து விட்டது.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications