பிச்சையெடுத்துப் படித்த மாணவிக்கு ஜெ. 1 லட்சம் உதவி
டெல்லி:
பிச்சையெடுத்த பணத்தைக் கொண்டே 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மைசூரைச் சேர்ந்ததமிழ் மாணவி நாகரத்னாவுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா ரூ.1 லட்சம் வழங்கினார்.
தான் ஒரு போலீஸ் அதிகாரியாக வர ஆசைப்படுவதாக அந்த மாணவி கூறியதும்,அதுவரை படிப்பதற்குத் தேவையான உதவிகளை அளிப்பதாகவும் ஜெயலலிதா உறுதிஅளித்தார்.
நிரந்தர வைப்புத் தொகையில் அந்தப் பணம் போடப்படுவதாகவும் அதிலிருந்து வரும்வட்டித் தொகையைப் படிப்புச் செலவுக்குப் பயன்படுத்திக் கொள்ளும்படியும்அம்மாணவியிடம் கூறினார் ஜெயலலிதா.
இதைத் தொடர்ந்து, பல்வேறு தரப்பு மக்களும் நாகரத்னாவுக்கு உதவி செய்யமுன்வந்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி ஆர். வெங்கட்ராமன், நடிகை சரோஜாதேவி ஆகியோரும் இந்தமாணவிக்கு பண உதவி செய்துள்ளனர்.
மைசூரில் உள்ள ஏதாவது ஒரு வங்கியில் தான் ஒரு கணக்கை ஆரம்பித்து, அதில் இந்தமாணவியின் கல்விச் செலவுக்காகப் பணத்தைப் போட இருப்பதாக வெளிநாட்டில்வசிக்கும் இந்தியர் ஒருவர் கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து, இவ்வளவு நாளும் பிச்சையெடுத்துப் படித்துக் கொண்டிருந்தநாகரத்னா, தற்போது பணமழையில் நனைந்து கொண்டிருக்கிறார்.
குடிகார அப்பாவிற்கும் பார்வை இழந்த அம்மாவிற்கும் இடையே தவித்துக்கொண்டிருந்த இம்மாணவியின் சொந்த ஊர் தமிழ்நாட்டின் திண்டுக்கல் என்பதுகுறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications