போலி சான்றிதழ்: உதவி தலைமை ஆசிரியர்-மாணவர் கைது
சேலம்:
போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து பிளஸ் டூ தேர்வு எழுதி, கல்லூரியில் சேர்ந்து படித்த மாணவரையும்,சான்றிதழ் பெற உதவிய தலைமை ஆசிரியரையும் போலீசார் கைது செய்தனர்.
சேலம் அருகே அம்மாபேட்டையைச் சேர்ந்த மாசிலாமணி என்பவரது மகன் ஞானதேசிகன் (22). இவர் தனியார்டியூசன் சென்டரில் படித்து வந்தார். 10ம் வகுப்பில் 239 மதிப்பெண்கள் பெற்று தோல்வி அடைந்தார்.
எனவே, அதிக மதிப்பெண் பெற வேண்டும் என வேண்டி அயோத்திப்பட்டினத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிதலைமை ஆசிரியர் ராமசாமி (60) என்பவரை அணுகினார்.
ராமசாமி, ஞானதேசிகனிடம் ரூ. 8 ஆயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டு 271 மதிப்பெண்கள் கொண்ட மதிப்பெண்சான்றிதழைக் கொடுத்தார்.
இந்தச் சான்றிதழைப் பெற்று பிளஸ் டூ வில் சேர்ந்தார் ஞானதேசிகன். பின்னர், அவர் பிளஸ் டூ தேர்ச்சி பெற்றுசேலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிபிஏ வில் சேர்ந்தார். அங்கு தற்போது முதலாமண்டு படித்துவருகிறார்.
இந்த நிலையில், தேர்வு எழுதிய மாணவர்களின் சான்றிதழை அதிகாரிகள் சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.அப்போது அவர்கள் ஞானதேசிகனின் சான்றிதழ் போலி எனக் கண்டறிந்தனர்.
பின்னர் இது குறித்து சேலம் நகரப் போலீசில் புகார் செய்தனர். இந்தப் புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவுசெய்தனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தலைமை ஆசிரியர் ராமசாமி ஓய்வு பெற்றார். இவரையும் தற்போதுகல்லூரியில் படித்து வந்த மாணவன் ஞானதேசிகனையும் போலீசார் கைது செய்தனர்.
தலைமை ஆசிரியராக இருந்த ராமசாமி, இந்த போலிச் சான்றிதழை சென்னையில் உள்ள வேறு ஒரு பள்ளியில்பெற்றது தெரிய வந்தது. இது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications