உழவர் சந்தைகளை மூடுவதா? குமரியார் கண்டனம்
சென்னை:
உழவர் சந்தைகளை மூடும் தமிழக அரசின் முடிவுக்கு தொண்டர் காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் கடும்கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
ஆளுநர் உரை மிகவும் ஏமாற்றம் தருவதாக அமைந்துள்ளது. உழவர் சந்தையின் வெற்றியைக் கண்டுதான் மீனவர்சந்தை வேண்டுமென்று மக்கள் கோரிக்கை வைத்தார்கள். ஆனால் அத்தகைய உழவர் சந்தைகளை மூட தமிழகஅரசு முடிவு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.
தமிழகமெங்கும் 460 மில்கள் மூடிக் கிடக்கின்றன. அதில் பணியாற்றும் தொழிலாளர்கள் பட்டினியில் பரிதவித்துவருகிறார்கள். அவர்கள் பிரச்சினைகளைத் தீர்க்க முனைப்பு காட்டாமல் பயனுள்ள உழவர் சந்தைகளை மூட தமிழகஅரசு முனைப்பு காட்டுவது வேதனைக்குரியது என்று குமரி அனந்தன் கூறியுள்ளார்.
வாழப்பாடி எதிர்ப்பு:
உழவர் சந்தையை மூடுவதற்கு தமிழக ராஜீவ் காங்கிரஸ் கட்சித் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தியும் கடும்கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக அரசு குறைகளைக் களைய வேண்டுமே தவிரஉழவர் சந்தையை மூடக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அதிமுக அரசு பதவியேற்றதையடுத்து நடந்த கவர்னர் உரையில், தமிழகம் முழுவதும் உழவர் சந்தையைமூட தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாகக் கூறப்பட்டிருந்தது.
இதற்கு சேலம் மாவட்டம் உள்பட பல மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்நடத்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications