உழவர் சந்தைகளை மூடுவதால் அரசுக்கு நஷ்டம்
கோவை:
பல கோடிக்கணக்கான ரூபாய் செலவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள உழவர் சந்தைகளை மூடுவதால் அரசுக்குத்தான்நஷ்டம் ஏற்படும்.
புதிய ஆட்சி எதிர்கொள்ளும் முதல் பிரச்சினையாக உழவர் சந்தை திகழ்கிறது. தமிழகம் முழுவதும் நுகர்வோருக்குநியாயமான விலையில் காய்கறி கிடைக்கவும், விவசாயிகளுக்கு உரிய பலன் கிடைக்கும் வகையிலும்,இடைத்தரகர்களை ஒழிக்கவும், திமுக ஆட்சியில் உழவர் சந்தைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால்,கிராமப் புற விவசாயிகளுக்கும், நகர்ப்புற நுகர்வோருக்கும் இணைப்பு பாலமாக உழவர் சந்தை விளங்கியது.
அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன், ஆளுநர் உரையிலேயே உழவர் சந்தையை மூடும் திட்டம் அறிவிக்கப்பட்டது.அதில், செயல்படாத உழவர் சந்தைகளை மூடுவோம் என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, பல இடங்களில் உழவர் சந்தை மூடும் திட்டத்திற்கு எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. குறிப்பாக, சேலத்தில்கடந்த இரண்டு நாட்களாக உழவர் சந்தை மூடுவதைக் கண்டித்து சாலை மறியல் நடந்தது. அதிகாரிகள் சமாதானப்படுத்தி அவர்களை அனுப்பி வைத்தனர்.
இதே போன்று மாநிலத்தின் பல பகுதிகளிலும் பரவலாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கோவையிலும் விரைவில்உழவர் சந்தை மூடுவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.
திமுக துவங்கிய திட்டம் என்பதற்காக இந்த உழவர்சந்தைகளை மூடினால், பொதுமக்களிடையே அதிமுக அரசுசந்திக்கும் முதல் அதிருப்தியாக இது அமையும். இந்தத் திட்டத்தில் உள்ள நல்ல அம்சங்களை எடுத்துக் கொண்டு,அதைச் செயல்படுத்த வேண்டும் என்பதே நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
செயல்பட்டு வரும் உழவர் சந்தை மூலம் அரசுக்கு வருவாய் கிடைத்து வருகிறதே ஒழிய, எவ்வித நஷ்டமும்கிடையாது. செயல்படாத உழவர் சந்தைகள் என கண்டுபிடிக்கப்பட்டாலும், இந்த சந்தைகளில் கூட்டமில்லாமல்போனாலும் இந்த சந்தைகளை மூடுவதால் அரசுக்கு எந்த விதத்திலும் லாபம் இல்லை.
அதே சமயம், பல கோடிக் கணக்கான ரூபாய் செலவிட்டு உருவாக்கப்பட்ட இந்த சந்தைகளை மூடுவதால்,செலவிடப்பட்ட அத்தனை தொகையும் வீணடிக்கப்பட்டு விடும். மாறாக, குறைந்த பட்சம் பொதுமக்களுக்குப்பயனுள்ள இடமாக மூடப்படும் சந்தைகளை மாற்றி அமைக்க அரசு திட்டமிட வேண்டும்.
உழவர் சந்தை மூடப்படுவதால் நஷ்டப்படுவர்கள் விவசாயிகளும் நுகர்வோரும் தான். மூடப்படும் இந்தசந்தையால், லாபம் ஈட்டுபவர்கள் இடைத் தரகர்கள் என்பதே உண்மை.
எனவே, திமுக அரசால் கொண்டு வரப்பட்ட திட்டம் என்பதைப் பார்க்காமல், பொதுமக்களின் நலனைக் கருத்தில்கொண்டு அதிமுக அரசு செயல்பட வேண்டும் என்பதே எல் லாருடைய எதிர்பார்ப்பாக உள்ளது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications