39 தமிழக மீனவர்கள் இலங்கையில் கைது

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கை எல்லைப்பகுதியில் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 39 பேர் அண்மையில் கைதுசெய்யப்பட்டனர் என்று இலங்கை கடற்படை அதிகாரி உபாலி ரனவீரா திங்கள்கிழமை தெரிவித்தார்.

இதுகுறித்து இலங்கையின் வடக்குப்பகுதி கடற்படை அதிகாரி ரனவீரா நிருபர்களிடம் கூறுகையில், முன்பு இலங்கைகடற்பகுதியில் அனுமதியின்றி மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை இலங்கை ராணுவ வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தி கைது செய்வர்.

ஆனால் இம்முறை துப்பாக்கியால் தாக்குதல் எதுவும் நடத்தாமல் கைது செய்துள்ளனர்.

கடந்த 2 வாரங்களுக்கு முன் கடற்படை வீரர்கள் தமிழகத்தைச் சேர்ந்த 31 மீனவர்களைக் கைது செய்துள்ளனர்.இவர்கள் யாழ்ப்பாணம் கடற்கரை பகுதியில் உள்ள கியாத் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தது தொடர்பாகக்கைது செய்யப்பட்டனர்.

இதற்கு சில நாட்களுக்கு முன்பு 8 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் அனைவரும் விசாரணைக்காக போலீஸாரிடம்ஒப்படைக்கப்பட்டுள்ளனர். ஜூன் 6 ம் தேதி வரை அவர்கள் மாஜிஸ்ட்ரேட் காவலில் வைக்கப்பட்டிருப்பர் என்றார்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+