மீண்டும் வருகிறார்கள் "தலைவர்கள்
சென்னை:
மாவட்டங்கள், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் ஆகியவற்றிற்கு ஜாதித் தலைவர்கள், தலைவர்களுடையபெயரை மீண்டும் சூட்ட அதிமுக அரசு முடிவு செய்துள்ளது.
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் பல மாவட்டங்கள், போக்குவரத்துக் கழகங்களுக்கு ஜாதித் தலைவர்கள் மற்றும்மறைந்த அரசியல் தலைவர்களுடைய பெயர்கள் வைக்கப்பட்டன. இதனால் பல இடங்களில் ஜாதி மோதல்கள்,வகுப்புக் கலவரங்கள் நடந்தன.
இதையடுத்து திமுக ஆட்சிக்காலத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்களின் ஒப்புதலுடன் தலைவர்களது பெயர்கள்நீக்கப்பட்டன. இருப்பினும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அந்த முடிவை அப்போது எதிர்த்தார்.அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தலைவர்களுடைய பெயர்கள் மீண்டும் சூட்டப்படும் என்றார்.
அதற்கேற்றார்போல, தற்போது தலைவர்களுடைய பெயர்களை மீண்டும் சூட்ட அதிமுக அரசு முடிவுசெய்துள்ளதாக சட்ட அமைச்சர் தம்பித்துரை கூறியுள்ளார். இதுகுறித்த முடிவை விரைவில் முதல்வர்அறிவிப்பார் என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications