செயல்படாத 90 உழவர் சந்தைகள்
சென்னை:
தமிழ்நாட்டில் கருணாநிதி ஆட்சியில் தொடங்கப்பட்ட 100 உழவர் சந்தைகளில் 10மட்டுமே செயல்படுகின்றன என்று தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா திங்கள்கிழமைகூறினார்.
இதுகுறித்து அவர் சட்டசபையில் கூறியதாவது:
உழவர் சந்தைகள் அனைத்தையும் நாங்கள் மூடப்போவதாக திமுகவினர் தவறானசெய்திகளைப் பரப்பி வருகின்றனர். செயல்படாத சந்தைகளைத் தான்மூடப்போகிறோம்.3 நாட்களாக உழவர் சந்தைகளை மூடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர்வலங்கள்,போராட்டங்களை விவசாயிகள் நடத்தி வருவதாகச் செய்திகள் வருகின்றன.
ஆனால் இப்போராட்டங்களில் விவசாயிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை.திமுகவினர்தான் இவற்றில் கலந்து கொண்டனர் என்று எனக்குச் செய்தி கிடைத்துள்ளது.
திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட உழவர் சந்தைகளில், 10 மட்டுமே தற்போதுசெயல்பட்டு வருகின்றன. செயல்படாத உழவர் சந்தைகள் மட்டுமே மூடப்படும் என்றுஆளுநர் உரையில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது என்று ஜெயலலிதா கூறினார்.
உண்மை நிலை என்ன?
உழவர் சந்தைகள் ஆரம்பிக்கப்பட்டபோது விவசாயிகளுக்கும் பொது மக்களுக்கும்மிகப் பெரிய வரப் பிரசாதமாய் அமைந்திருந்தது. ஆனால், இப்போது நிலைமைமெதுவாக மாறி வருகிறது.
மதுரை போன்ற நகரங்களில் உழவர்கள் என்ற பெயரில் பெரிய காய்கறிவியாபாரிகள் உழவர் சந்தை கடைகளை ஆக்கிரமிக்க ஆரம்பித்துவிட்டனர்.
மதுரை சென்ட்ரல் மார்க்கெட்டில் கடை வைத்திருக்கும் பல பெரிய காய்கறிவியாபாரிகள் உழவர் சந்தையிலும் ஒரு பிராஞ்சை தொடங்கிவிட்டனர். இவர்களுக்குபண பலமும், கட்சிகள் பின் பலமும் இருப்பது அதிகாரிகளின் கைகளை கட்டிப்போடுகிறது.
மேலும் பலர் மார்க்கெட்டில் இருந்து காய்கறிகள் வாங்கி வந்து உழவர் சந்தைகளில்விற்க ஆரம்பித்துள்ளனர். இங்கு உழவர்களோடு சேர்த்து பொது மக்களையும் இந்தவியாபாரிகள் ஏமாற்றி வருகின்றனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications