காண்ட்ராக்டர் கடத்தல்: மாஜி திமுக எம்.பி கைது... ஸ்டாலினும் கைதாகலாம்
சென்னை:
நெடுஞ்சாலைத்துறை காண்ட்ராக்ட்ரை ரூ.1 கோடி கேட்டு மிரட்டியதாக, சென்னை மாநகர மேயர் மு.க.ஸ்டாலின்மீதும், முன்னாள் நெடுஞசாலைத்துறை அமைச்சர் தா. கிருட்டிணன் மீதும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, திமுகவின செங்கல்பட்டு முன்னாள் எம்.பி. பரசுராமன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு குறித்த விபரம்:
நெடுஞ்சாலைத்துறை காண்ட்ராக்டர் தெய்வசிகாமணி என்பவருக்கு மாஜி திமுக எம்.பி. பரசுராமன் சிபாரிசின்பேரில் சென்னையில் ரோடு போடும் காண்ட்ராக்ட் கொடுக்கப்பட்டது.
இதற்காக 5 சதவீத கமிஷன் தரவேண்டும் என்று பரசுராமன் கேட்டார். மு.க.ஸ்டாலினுடன் இருக்கும் ரமேஷ் என்றதரகர் மூலம் இந்தக் கமிஷனை பரசுராமனுக்கு காண்ட்ராக்டர் வழங்கினார்.
தனக்கு மட்டுமல்லாமல் மேயர் ஸ்டாலின், அப்போதைய அமைச்சர் கிருட்டிணன் ஆகியோருக்கும் கமிஷன்கொடுக்க வேண்டும் என்று காண்ட்ராக்டரிடம் பரசுராமன் கூறியுள்ளார். ஆனால், காண்ட்ராக்டர் தெய்வசிகாமணிஇந்த இருவருக்கும் பணம் தரவில்லை எனத் தெரிகிறது.
இந்நிலையில், கடந்த மே 26ஆம் தேதி அடையாளம் தெரியாத சிலர் தெய்வசிகாமணியைக் காரில் கடத்திச்சென்றனர்.
இதையடுத்து தெய்வசிகாமணியின் வீட்டுக்கு பரசுராமன் போன் செய்து, ரூ.1 கோடி தராவிட்டால்தெய்வசிகாமணியைக் கொன்று விடுவோம் என தெய்வசிகாமணியின் மகன் ஜெய்சங்கரை மிரட்டியுள்ளார்.
தெய்வசிகாமணியைக் கடத்திய கும்பல் நாள் முழுவதும் காரிலேயே சுற்றி விட்டு மாலையில் அவரை வீட்டின்அருகே இறக்கி விட்டுச் சென்றனர்.
வீடு திரும்பிய தெய்வசிகாமணி தான் கடத்தப்பட்டது குறித்தும், தனது மகனை திமுக முன்னாள் எம்.பி. பணம்கேட்டு மிரட்டியது தொடர்பாகவும் கே.கே. நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
புகாரை ஏற்ற போலீஸார் பரசுராமனைக் கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 15 நாள்காவலில் வைக்குமாறு நீதிபதி அசோக் குமார் உத்தரவிட்டார். இதையடுத்து அவர் சென்னை மத்திய சிறையில்அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில் பரசுராமன் தவிர மேயர் மு.க.ஸ்டாலின், தா.கிருட்டிணன் ஆகியோரது பெயர்களும்சேர்க்கப்பட்டுள்ளன. மு.க.ஸ்டாலின் இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். எனவே அவரும் கைதுசெய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக போலீஸ் கமிஷனர் முத்துக்கருப்பன் உத்தரவின் பேரில், கூடுதல் துணைக் கமிஷனர்முருகவேல் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
திமுக அவசரக் கூட்டம்:
இதற்கிடையே, ஸ்டாலின் மீதும் பிற தி.மு.க.வினர் மீதும் தொடர்ந்து வழக்குகள் தொடரப்பட்டு வருவது குறித்துவிவாதிக்க தி.மு.க. பொதுக்குழுவின் அவசரக் கூட்டம் வரும் ஜூன் மாதம் 4ஆம் தேதி நடைபெறவுள்ளது.
சென்னையிலுள்ள கலைஞர் அரங்கில் காலை 10 மணிக்கு பொதுக்குழுக் கூட்டம் நடக்கும். அப்போது அ.தி.மு.க.அரசின் பழி வாங்கும் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் என்று தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன்விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழிவாங்கத் துடிக்கிறது அ.தி.மு.க. அரசு: ஸ்டாலின்
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications