பழிவாங்கத் துடிக்கிறது அ.தி.மு.க. அரசு: ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

என்னைப் பழிவாங்கவே, நான் ரூ.1 கோடி கேட்டு மிரட்டியதாக பொய்யாக வழக்குப் பதிவு செய்துள்ளனர் என்றுசென்னை மேயர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

நெடுஞ்சாலைத்துறை காண்ட்ராக்டர் தெய்வசிகாமணியிடம் முன்னாள் தி.மு.க எம்.பி. பரசுராமன் ரூ.1 கோடிகேட்டு மிரட்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்தா.கிருட்டிணன் ஆகியோரது பெயர்களும் அந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெய்வசிகாமணி என்ற நபர் கொடுத்த புகாரின் பேரில் என்மீதும், முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன் மீதும் வழக்கு தொடரப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த வழக்கு ஜோடிக்கப்பட்ட, பொய்யான ஒரு வழக்காகும். தி.மு.க. ஆட்சியில் கட்டுமானப் பணிகள் மற்றும்வளர்ச்சிப் பணிகள், முறையாக டெண்டர்கள் விடப்பட்டே மேற்கொள்ளப்பட்டு வந்ததை நாடறியும்.

இந்த நிலையில் பழி வாங்கும் போக்குடன், சிலரைப் பிடித்து அச்சுறுத்தி பொய் புகார்களை வாங்கிடகாவல்துறையை முடுக்கி விட்டுள்ளது இந்த அரசு.

அ.தி.மு.க. அரசு எடுக்கும் எந்த நடவடிக்கையையும் சந்திக்கத் தயாராகவுள்ளேன் என்று கூறியுள்ளார் ஸ்டாலின்.

காண்ட்ராக்டர் கடத்தல்: மாஜி திமுக எம்.பி கைது... ஸ்டாலினும் கைதாகலாம்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+