4 பாடங்களில் சதமடித்த டீக்கடை மாணவன்
கடலூர்:
பெற்றோருடன் டீக்கடையில் வேலை பார்த்துக்கொண்டே படித்த மாணவர் கணிதம்,இயற்பியல், வேதியியல், தாவரவியல் ஆகிய நான்கு பாடங்களிலும் 200க்கு 200மதிப்பெண் பெற்று சாதனை செய்துள்ளார்.
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள செயின்ட்பால் பள்ளி மாணவர் செல்லம், தன்பெற்றோருடன் டீக்கடையில் வேலை பார்த்தவாறே படித்து வந்தார்.
இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் கணிதம், இயற்பியல் , வேதியியல், தாவரவியல்ஆகிய 4 பாடங்களிலும் அவர் 200க்கு 200 மதிப்பெண் பெற்று தேர்ச்சிஅடைந்துள்ளார்.
மேலும் இவர் மொத்தம் 1,200க்கு 1,166 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
இது குறித்து செல்லம் கூறுகையில், எனக்கு சிறு வயதுமுதலே படிப்பில் ஆர்வம் உண்டு.நான் ஏழை குடும்பத்தில் பிறந்திருந்தாலும், நான் நன்கு படிக்க வேண்டும் என என்பெற்றோர் விரும்பினர்.
என் படிப்பிற்கு எந்த விதமான இடையூறும் வரக்கூடாது என்பதற்காக அவர்கள்கூடடிவி பார்ப்பதில்லை. என் தாய் தினமும் அதிகாலை 4 மணிக்கு என்னை எழுப்பிவிடுவார். அதற்காக அவர் தூங்காமல் விழித்திருப்பார். நான் என் ஓய்வு நேரத்தில்என் பெற்றோருக்கு உதவியாக டீக்கடையில் வேலை செய்துவந்தேன்.
என் பெற்றோரும். என் பள்ளி ஆசிரியர்களும் எனக்கு அளித்து வந்த ஊக்கமே என்வெற்றிக்கு மூல காரணம்.
நான் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்க விரும்புகிறேன். என் மேல் படிப்புக்குஅரசு உதவி செய்தால் நான் மகிழ்ச்சியடைவேன் என்றார்.
செல்லத்தின் சாதனை குறித்து அவரது பள்ளி முதல்வர் ஜான் போஸ்கோ கூறுகையில்,செல்லம் பள்ளியில் முதல் மாணவராக வருவார் என எதிர்பார்த்தேன். ஆனால் அவர்மாவட்டத்திலேயே முதல் மாணவராக தேர்ச்சி பெற்று பள்ளிக்கு பெருமைசேர்த்துள்ளார். ஏழை மாணவனாக இருப்பதால் அவரது உயர் கல்விக்கு தேவையானஉதவிகளை பள்ளி நிர்வாகம் செய்யும் என்றார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications