பாக்.தூதரகத்தில் கூடுதல் பாதுகாப்பு இல்லை
டெல்லி:
பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் முஷாரப் இந்தியா வருவதையொட்டி டெல்லியிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்தில்கூடுதல் பாதுகாப்பு போடும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இருப்பினும் டெல்லியிலுள்ள பாகிஸ்தான் தூதரக செயல்பாடுகளையும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும்போலீஸார் தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர் என்றும் மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
காஷ்மீர் பிரச்சனை உள்பட பல்வேறு பிரச்சனைகள் குறித்து பிரதமர் வாஜ்பாயுடன் பேச்சுவார்த்தைநடத்துவதற்காக ஜூலை மாதம் பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் முஷாரப் இந்தியா வருகிறார்.
இதுகுறித்து டெல்லி துணை போலீஸ் கமிஷனர் ஆர்.எஸ்.கிருஷ்ணய்யா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,முஷாரப் எப்போது வருவார் என்று திட்டவட்டமாக அறிவித்தபின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நாங்கள்பரிசீலனை செய்வோம்.
இதுவரை சமூகவிரோதிகளிடமிருந்து முஷாரப் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மிரட்டல்கள் எதுவும் வரவில்லைஎன்றார்.
இருப்பினும் பிற போலீஸ் அதிகாரிகள் தெரிவிக்கையில், ஜூன் மாத இறுதியிலோ அல்லது ஜூலை மாததொடக்கத்திலோ முஷாரப் இந்தியா வருவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் முஷாரப் வருவதற்கு முன்போ அல்லது அவர் வரும்போதே டெல்லியில் அவரது வருகையைக் கண்டித்துபோராட்டங்கள், ஊர்வலங்கள் நடக்கலாம் என்று தெரிகிறது என்று கூறினர்.
இதற்கிடையே, செவ்வாய்க்கிழமை டெல்லியில் சிவசேனை ஆதரவாளர்கள் முஷாரப்பின் கொடும்பாவியைஎரித்தனர். இருப்பினும் சிவசேனை கட்சி பிரமுகர்கள் போராட்டத்தைப் போலீஸார் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
டெல்லியிலுள்ள சாங்கியாபுரி பகுதியில் பாகிஸ்தான் தூதரகம் அமைந்துள்ளது. அங்கு பாதுகாப்பு கடுமையாகஉள்ளது. இன்னும் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டிய அவசியம் இல்லை.
இந்தப் பகுதியில் தர்ணா நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் டெல்லியின் புறநகர்ப்பகுதிகளில்போராட்டங்கள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
1987 ம் ஆண்டுக்குப்பிறகு பாகிஸ்தான் ஆட்சியாளர் ஒருவர் இந்தியா வருவது இதுவே முதல்முறை என்பதுகுறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications