தென் ஆப்பிரிக்காவில் தென் இந்திய ஹோட்டல்
ஜோகனர்ஸ்பர்க்:
இந்தியாவின் யுனைடெட் புரோவரீஸ் கம்பெனியும் (யுபி குருப்), தென் ஆப்பிரிக்காவில் இருக்கும் ஹோட்டல்கம்பெனியும் இணைந்து தென் ஆப்பிரிக்காவில் தென் இந்திய ஓட்டலை திறந்துள்ளன.
இதுதான் தென் ஆப்பிரிக்காவில் திறக்கப்பட்டுள்ள முதல் தென் இந்திய ஹோட்டல் என்பது குறிப்பிடத்தக்கது.
தென் ஆப்பிரிக்கா ஜனநாயக நாடான பிறகு இந்தியாவிலிருந்து பலரும் தென் ஆப்பிரிக்கா செல்லத் துவங்கினர்.இந்தியர்களும், பாகிஸ்தானியர்களும் பெருமளவில் தென் ஆப்பிரிக்கா சென்று பல ஹோட்டல்களை திறந்தனர்.
சாலையோரங்களில் இருக்கும் கோழிக்கறி கடைகளிலிருந்து பெரிய ஹோட்டல் வரை பல ஹோட்டல்களும் தென்ஆப்பிரிக்காவில் உள்ளன.
ஆனாலும், தென் ஆப்பிரிக்காவிலுள்ள பல ஹோட்டல்களிலும் வட இந்திய உணவுகளே தயாரிக்கப்படுகின்றன.இதுவே ராஜ் குரூப் ஹோட்டல் நிறுவனத்தினரை தென் இந்திய உணவகத்தை திறக்கும் எண்ணத்தை தூண்டி, தென்ஆப்பிரிக்காவின் முதல் தென் இந்திய உணவகத்தை திறக்க வைத்திருக்கிறது.
இந்த ஹோட்டலில் தென் இந்தியாவின், சுவையான தோசை, இட்லி. சாம்பார் போன்றவை கிடைக்கும்.ஜோகானஸ்பர்க்கின் வடக்கே இருக்கும் கியாலாமியில் திறக்கப்பட்டுள்ள இந்த ஹோட்டலின் திறப்பு விழாவின்சிறப்பு நிகழச்சியில் தென் ஆப்பிரிக்காவிற்கான இந்தியதூதர் ஷிவ் முகர்ஜி உள்ளிட்ட பல சிறப்பு விருந்தினர்கள்கலந்து கொண்டனர்.
இவர்களுக்கு இந்த ஹோட்டலில் தயாரிக்கப்பட்ட தென் இந்திய உணவு வகைகள் பரிமாறப்பட்டன. இவர்களுக்குஅரிசி அரைக்கும் இயந்திரம், இட்லி செய்ய உதவும் உபகரணங்கள் போன்றவைகளின் செயல் முறைகள் செய்துகாண்பிக்கப்பட்டன.
இங்கு தயாரிக்கப்படும் உணவு வகைகள் குறித்து இந்த ஹோட்டலின் தமைைை சமையல் காரர்களில் ஒருவாரனவிஸ்வநாதன் ராமாசாமி கூறுகையில், பெரும்பாலன தென் இந்திய உணவு வகைளில் அரிசி, தேங்காய்போன்றவற்றை அதிகமாக உபயோகப்படுத்தப்படும். இவை தென் ஆப்பிரிக்காவில் அதிகமான அளவில்அதிகமாக கிடைக்கிறது
இவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் தென் இந்திய உணவுகளின் விலையும் வட இந்திய உணவு வகைகளின்விலையை விட குறைவாகவே இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது என்றார்.
இங்கு சமையலுக்காக வந்திருக்கும் பலரும் சென்னையிலிருந்தும், பெங்களூரிலிருந்தும்வரவழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தங்களுடன் சமையல் குறிப்புகளுடன் தென் இந்திய உணவுப் பொருட்களைதயாரிப்பதற்கு தேவையான பாத்திரங்களையும் எடுத்துச் சென்றுள்ளனர்.
இவர்கள் சிறப்புத் தயாரிப்பில் நாவில் நீர் ஊறவைக்கும் உருளைக்கிழங்கு போண்டா, வடை, இட்லி, பிசிபேளாஹுளி சாதம், பருப்பு பாயசம் போன்றவை முக்கியமானவை.
1996ம் ஆண்டு முதல் லண்டனிலிருந்து வந்து ஹோட்டலை ஆரம்பித்து வட இந்திய உணவுகளை தயாரித்துவழங்கும் ஹோட்டலை ரிவோனியாவில் நடத்தி வருகிறார் கண் அறுவை சிகிச்சை நிபுணரான அருண் ஜயாராத்.
இவர் கூறுகையில், இந்த ஹோட்டலுக்கு நல்ல வரவேற்பு இருந்தால், எங்கள் ஹோட்டலின் கியாலாமி கிளையில்தென் இந்திய உணவுகளை மட்டுமே தயாரித்து வழங்குவோம்.
ரிவோனியாவில் இருக்கும் எங்கள் ஹோட்டல் பிரத்யேகமாக வட இந்திய உணவுகளை தயாரித்து வழங்கும்,கியாலாமி கிளைதென் இந்திய உணவுகளை பிரத்யேகமாக தயாரித்து வழங்கும் என்றார்.
புதிதாக திறக்கப்பட்டுள்ள தென் இந்திய ஹோட்டல் தற்போது த்ரீ சிட்டீஸ் குரூப்பின் பகுதியாக இயங்கி வருகிறது.விரைவில் ராஜ் ரெஸ்டாரண்ட் என்ற பெயரில் தென் ஆப்பிரிக்கா முழுதும் ஹோட்டல் நடத்துவதற்காக தென்ஆப்பிரிக்க அரசிடம் உரிமை கோரவுள்ளது ராஜ் ரெஸ்டாரண்ட் நிறுவனம்.
த்ரீ சிட்டீசின் திட்டம் மற்றும் மேம்பாட்டு மேலாளர் நிக் ஃபேர்பாங்க்ஸ் கூறுகையில், யுபி நிறுவனத்துடன் நாங்கள்இணைந்து துவக்கியுள்ள தென் இந்திய ஹாட்டல் ஒப்பற்றது என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்!












Click it and Unblock the Notifications