ஜான் பாண்டியன் ஜாமீனில் விடுதலை
சென்னை:
தேர்தல் வன்முறை தொடர்பாக கைது செய்யப்பட்ட தமிழக முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன்ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
அவர் சென்னைக்கு வரக்கூடாது. செங்கல்பட்டில்தான் தங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.
சென்னை எழும்பூர் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர் ஜான் பாண்டியன்.இவரை எதிர்த்து போட்டியிட்டு திமுக வேட்பாளர் பரிதி இளம்வழுதி வெற்றி பெற்றார்.
தேர்தல் நாளன்று ஜான் பாண்டியன் மற்றும் பரிதி இளம்வழுதியின் ஆட்களிடையே தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து இருவருமே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஜான் பாண்டியனும், அவரதுஆட்கள் 48 பேரும் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து ஜான் பாண்டியனும் அவரது ஆட்களும் சென்னை முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் ஜாமீன் மனுத்தாக்கல் செய்தனர். இதில் ஜான் பாண்டியன் தவிர அவரது ஆட்கள் 48 பேர் விடுவிக்கப்பட்டனர். பின்னர் ஜான்பாண்டியன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதி மலை.சுப்ரமணியம் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி மலை.சுப்ரமணியம் தனது தீர்ப்பில் கூறியதாவது:
ஜான் பாண்டியன் மீது தாக்கல் செய்யப்பட்டுள்ள 7 வழக்குகளில் 2 வழக்குகளில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ள ஜான் பாண்டியன் சென்னை நகருக்குள் வரக் கூடாது.
ஜான் பாண்டியனும், பரிதி இளம்வழுதியும் ஒரே ஊரில் இருக்கக் கூடாது என்பதால்தான் இந்த உத்தரவு. வழக்குவிசாரணையின்போது மட்டுமே ஜான் பாண்டியன் சென்னைக்கு வர வேண்டும்.
இவர் ரூ 10 ஆயிரத்துக்கு சொந்த ஜாமீனும், அதே தொகைக்கு இரு நபர் ஜாமீனும் வழங்கி ஜாமீன் பெறலாம்.அவர் செங்கல்பட்டில்தான் தங்கியிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார் நீதிபதி.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications